Flipkart Freedom Sale 2025: ஆகஸ்ட் மாதத்தில் “Freedom Sale” என்ற பெயரில் ஒரு பெரிய விற்பனையை பிளிப்கார்ட் கொண்டு வருகிறது. இந்த விற்பனையானது வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்பு தொடங்கும், இது ஆண்டின் மிகப்பெரிய விற்பனைகளில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டேப்லெட், ஏசி, டிவி, ஃபிரிஜ் போன்ற பொருட்களில் மிகப்பெரிய அளவில் தள்ளுபடிகளையும் பெறலாம். இது தவிர, பிளிப்கார்ட் பல சிறப்பு சலுகைகளையும் வழங்க இருக்கிறது.
இந்நிலையில் நீங்கள் தற்சமயம் ஐபோன் வாங்க பிளான் செய்துக் கொண்டு இருந்தால், உடனே இந்த கட்டுரையை படிக்கவும். பிளிப்கார்ட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃப்ரீடம் சேல் 2025 (Freedom Sale 2025) விஅறுகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் கோலாகலமாகத் தொடங்கப் போகிறது, இந்த விற்பனையில் பல சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள் இடம்பெற்று இருக்கும். இந்த விற்பனையின் போது, நீங்கள் மலிவு விலையில் விலையுயர்ந்த போன்களை அசால்டாக வாங்கலாம். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த விற்பனையில் ஆப்பிளின் ஐபோன் மாடல்களுக்கு மிகப்பெரிய அளவிலான தள்ளுபடி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேதி முதல் விற்பனை தொடங்கம்
பிளிப்கார்ட் இன் vip உறுப்பினர்கள் Flipkart Freedom Sale 2025 விற்பனையில் அதிக சலுகைகளைப் பெறலாம், ஏனெனில் விஐபி உறுப்பினர்களுக்கான இந்த விற்பனை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதலே தொடங்கிவிடும். மீதமுள்ள வாடிக்கையாளர்களுக்கு 2 ஆம் தேதி முதல் இந்த விற்பனையில் ஷாப்பிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக ஐபோனில் சிறந்த சலுகைகளைப் பெறலாம். அதன்படி வாடிக்கையாளர்கள் சமீபத்தில் வெளியான ஐபோன் மாடல்களான ஐபோன் 16, ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஃபோன்களில் பெரிய சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஐபோனில் ஆயிரக்கணக்கான தள்ளுபடிகள்
இது தொடர்பான வெளியான செய்தியின் படி, 128 ஜிபி ஐபோன் 16 இன் விலை ரூ.79,900 இருக்கும் நிலையில் நீங்கள் பிளிப்கார்ட் விற்பனையில், வெறும் ரூ.59,999க்கு மிகப்பெரிய தள்ளுபடியுடன் வாங்கலாம். இது தவிர, ரூ.1,29,900 விலையில் உள்ள ஐபோன் 16 ப்ரோவின் விலை ரூ.1,09,999 ஆக பெறலாம். இது மட்டுமல்லாமல், கிரெடிட் கார்டுகள் மற்றும் சில வங்கிகளின் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்ஃபோன்களில் கூடுதலாக ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை தள்ளுபடியைப் பெறலாம்.
இந்த பிராண்டுகளிலும் தள்ளுபடி வழங்கப்படும்
இந்த பிளிப்கார்ட் விற்பனையில், ஐபோனைத் தவிர, பிற பிராண்டுகளின் மொபைல்களிலும் சிறந்த சலுகைகளைப் பெறலாம். இவற்றில், Samsung Galaxy S24, Nothing Phone 3A, OnePlus 12 Series, Vivo மற்றும் Realme flagship போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகளை அறிவிக்க உள்ளது.