அல்காய்தா அமைப்புடன் தொடர்பு: பெங்களூருவில் பெண் கைது

பெங்களூரு: அல்காய்தா தீவிர​வாத அமைப்​புடன் தொடர்​புடைய 30 வயது பெண் பெங்​களூரு​வில் கைது செய்​யப்​பட்​டார். இந்தியாவில் அல்காய்தா தீவிர​வாத அமைப்​பின் சித்​தாந்​ததை விதைக்​கும் நோக்​கில் முஸ்​லிம் இளைஞர்​களைத் தூண்​டி​விட்டு இந்​திய அரசுக்கு எதி​ராக வன்​முறை​யில் ஈடு​படு​வதாக குஜ​ராத் தீவிர​வாத ஒழிப்பு படை​க்கு மின் அஞ்சல் வந்தது.

இதையடுத்து சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைக்​கப்​பட்​டது. இந்த குழு​வினர் கடந்த வாரத்​தில் அகம​தா​பாத்தை சேர்ந்த ஃபர்​தீன் ஷேக் (24) உள்ளிட்ட நால்​வரை கைது செய்​தனர். இந்த நால்​வரிட​மும் தனித்​தனி​யாக நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் நாட்​டில் அல்காய்தா தீவிர​வாத அமைப்​புடன் தொடர்​புடைய வேறு சிலரின் பெயர்​களும் கிடைத்​தன.

அதன் அடிப்​படை​யில் குஜ​ராத் தீவிர​வாத எதிர்ப்​புப் படை​யினர் பெங்​களூருவை சேர்ந்த சாமா பர்​வீன் (30) என்​பவரை நேற்று முன்​தினம் இரவு கைது செய்​தனர். அவர் அல்காய்தா தீவிர​வாத அமைப்​புடன் தொடர்பில் இருந்தது தெரிய​வந்​தது. இதையடுத்து சாமா பர்​வீன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​து கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.