OPS: "தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் எதுவும் நடக்கலாம்"-மு.க.ஸ்டாலின் சந்திப்புக் குறித்து ஓ.பி.எஸ்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை அடையாறு பார்க்கில் வாக்கிங் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.

அடுத்த சில மணிநேரங்களில், அவரின் அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக்கு கூட்டத்துக்குப் பிறகு, அதன் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், பாஜக கூட்டணியிலிருந்து தாங்கள் வெளியேறுவதாக அறிவித்தார். அடுத்த சில மணிநேரங்களில் மாலையில் ஆழ்வார்பேட்டையில் ஸ்டாலினை அவரது இல்லத்தில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்தார்.

ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

இந்த சந்திப்பைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி!” எனக் குறிப்பிட்டு, ஓ. பன்னீர்செல்வத்துடனான படத்தைப் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து செய்தியளர்களிடம் பேசியிருக்கும் ஓ.பன்னீர்செல்வம், “அவரின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காகத்தான் மரியாதை நிமித்தமாக அவரை இன்று சந்தித்தேன்.

மேலும், கலைஞரின் மூத்தமகன் மு.க.முத்துவின் மறைவு குறித்தும் துக்கம் விசாரித்தேன். அரசியல் நிமித்தமாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அரசியலில் நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை என்பதுதான் கடந்த கால வரலாறு. எதிர்காலத்தில் தேர்தல் நெருங்குகின்ற போது எதுவும் நடக்கலாம்.” என்று கூறினார்.

ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

மேலும், பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகிய பிறகு பாஜக தலைவர்கள் தங்களிடம் பேச முற்பட்டார்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, “இதுவரை யாரும் இல்லை” என்று பதிலளித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், தங்களின் மதிப்பு புரியாமல் அவமானப்படுத்தியதாக இதை பார்க்கிறீர்களா என்ற கேள்வியும் பத்திரிகையாளர் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

அதற்கு, “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அரசியலில் எனக்கென்று சுயமரியாதை இருக்கிறது. அம்மாவிடம் 25 ஆண்டுக்காலம் நேரடிப் பார்வையில் பணியாற்றியிருக்கிறேன். அரசியல் ரீதியாக, கட்சி ரீதியாக அனைத்தும் எனக்குத் தெரியும். இன்று எனக்கு ஒரு வருத்தம் இருக்கிறது.

ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

நாடாளுமன்றத்தில் சமக்ர சிக்‌ஷா நிதியுதவி பற்றி ஒரு கேள்வியெழுப்புகின்றபோது, மும்மொழிக்கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை அதனால்தான் அந்த நிதியை நிறுத்திவைத்திருக்கிறோம் என்று சொல்கின்ற சூழ்நிலை கல்வியமைச்சருக்கு (தர்மேந்திரா பிரதான்)இருக்கிறது. ஜனநாயக நாட்டில் அது ஏற்புடையதல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து.” என்று ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.