இன்று 90 வயதைத் தொடும் தலாய் லாமா! – அடுத்த தலாய் லாமா தேர்வும், சீனா நகர்த்தும் காய்களும்|Explained

‘அடுத்த தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்படுவாரா?’ என்கிற கேள்விக்கு பதில், கடந்த 2-ம் தேதி, தலாய் லாமாவின் எக்ஸ் பக்கத்தில் அறிக்கையாக வெளிவந்தது. இந்த அறிக்கை, இந்த ஆண்டு மே மாதம் 21-ம் தேதி தலாய் லாமாவால் வெளியிடப் பட்டிருந்திருக்கிறது. ஆனால், இது பெரிய அளவில் வெளியில் தெரியவில்லை. தற்போதைய தலாய் லாமாவின் 90-வது பிறந்த நாள் (ஜூலை 6(இன்று)) நெருங்கியதைத் தொடர்ந்து, ‘அடுத்த தலாய் லாமா யார்?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. காரணம், அவர் தனது 90-வது … Read more

“தமிழ்நாட்டில் பாஜக ஒருக்​காலும் காலூன்ற முடியாது…” அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா நேர்க்காணல்

வலுவான கூட்டணியை அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டே இருந்தாலும் பாஜக – அதிமுக கூட்டணியை பொருந்தாத கூட்டணியாகவே பலரும் விமர்சிக்கிறார்கள். இதுகுறித்து அதிமுக-வுக்குள்ளும் இருவேறு கருத்துகள் இருக்கவே செய்கின்றன. கூடவே, பாஜக-வின் ‘கூட்டணி ஆட்சி’ கோஷமும் அதிமுக-வினரை சீண்டிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம். பாஜக-வுடன் எந்தக் காலத்திலும் இனி கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் அதனுடன் … Read more

அயோத்தி, ராமேஸ்வரம் உட்பட 30 புனித தலங்களை இணைக்கும் 17 நாள் சுற்றுப்பயணம்: ஏசி சுற்றுலா ரயில் ஏற்பாடு

புதுடெல்லி: நாடு முழு​வதும் பல்​வேறு சுற்​றுலாத் திட்​டங்​களை இந்​திய ரயில்வே கேட்​டரிங் மற்​றும் சுற்​றுலா கழகம் (ஐஆர்​சிடிசி) இயக்கி வரு​கிறது. தற்​போது புதி​தாக அயோத்தி ராமர் கோயில் உள்​ளிட்ட 30 இடங்​களை இணைக்​கும் 17 நாள் சுற்​றுலாத் திட்​டத்தை ஐஆர்​சிடிசி அறி​முகம் செய்​துள்​ளது. கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் திறக்​கப்​பட்​டதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமாயண யாத்ரா என்ற பெயரில் ரயில்​களை ஐஆர்​சிடிசி இயக்கி வரு​கிறது. தற்​போது அறி​முகம் செய்​யப்​பட்​டுள்ள இந்த சுற்​றுலாத் திட்​டம் … Read more

ஏசி சுற்றுலா ரயிலில் அயோத்தி ராமேஸ்வரம் உள்ளிட்ட 30 புனித தலங்களுக்கு பயணம் : ஐஆர்சிடிசி

டெல்லி ஐஆர்சிடிசி அயோத்தி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 30 புனித தலங்களுக்கு பயணம் செய்ய ஏசி சுற்றுலா ரயில் ஏற்பாடு செய்துள்ளது. ஐஆர்​சிடிசி அதி​காரி​கள், “அயோத்​தி​யில் ராம ஜென்​மபூமி கோயில் திறக்​கப்​பட்​டதைத் தொடர்ந்​து, பல்​வேறு துறை​களைச் சேர்ந்த பக்​தர்​கள் மிகுந்த ஆர்​வத்​துடன் அயோத்​திக்கு வரு​கின்​றனர். மேலும், மத மற்​றும் கலாச்​சார சுற்​றுலாத்​துறை மிகப்​பெரிய ஊக்​கத்​தைப் பெற்​றுள்​ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்​குப் பிறகு, இது நாங்​கள் நடத்​தும் 5-வது ராமாயண சுற்​றுப்​பயண​மாகும், மேலும் எங்​கள் முந்​தைய அனைத்து … Read more

திமுக ஆட்சி என்றாலே அராஜகம்தான்: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விமர்சனம்

திருப்புவனம்: ​தி​முக ஆட்சி என்​றாலே அராஜகம்​தான் என்று தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா கூறி​னார். சிவகங்கை மாவட்​டம் மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் கொலைக்கு நீதி கேட்டு தேமு​திக சார்​பில் திருப்​புவனத்​தில் நேற்று நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் பிரேமலதா பேசி​ய​தாவது: அஜித்​கு​மாரை போலீ​ஸார் அடித்தே கொன்​றுள்​ளனர். அவரைக் கொன்​றவர்​களுக்​கும் இது​போன்ற தண்​டனை கொடுக்க வேண்​டும். புகார் கொடுத்த நிகிதா குறித்து சரிவர விசா​ரிக்​க​வில்​லை. எனவே, இவ்​விவ​காரத்​தில் சிபிஐ உண்​மையை வெளிக்​கொணர வேண்​டும். தமிழகத்​தில் கடந்த ஒரு வாரத்​தில் வரதட்​சணைக் … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு; ஏஜேஎல் நிறுவனத்தை காப்பாற்ற காங். முயற்சி – ராகுல் காந்தியின் வழக்கறிஞர் வாதம்

புதுடெல்லி: ‘‘அசோசி​யேட்​டட் ஜர்​னல்ஸ் நிறு​வனத்​தின் (ஏஜேஎல்) சொத்​துகளை விற்க நினைக்​க​வில்​லை. அதை காப்​பாற்​றவே காங்​கிரஸ் கட்சி முயற்​சித்​தது’’ என்று நீதி​மன்​றத்​தில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி​யின் வழக்​கறிஞர் வாதாடி​னார். அசோசி​யேட்​டட் ஜர்​னல்ஸ் நிறு​வனத்தை (ஏஜேஎல்) சுதந்​திரத்​துக்கு முன்பு ஜவகர்​லால் நேரு தொடங்​கி​னார். இதில் 5,000-க்​கும் மேற்​பட்ட சுதந்​திரப் போராட்ட வீரர்​கள் பங்​கு​தா​ரர்​களாக இருந்​தனர். இதன் சார்​பில் நேஷனல் ஹெரால்டு உள்​ளிட்ட சில பத்​திரி​கைகள் வெளி​யா​யின. நிதி நெருக்​கடி ஏற்​பட்​ட​தால், இந்​நிறு​வனத்​துக்கு காங்​கிரஸ் கட்சி ரூ.90 கோடி … Read more

இன்று அதிகாலை அந்தமான் கடல் பகுதியில் நில நடுக்கம்

போர்ட் பிளேர் இன்று அதிகாலை அந்தமான் கடல் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது, இன்று அந்தமான் கடல் பகுதியில் அதிகாலை 1.12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது அந்தமான் கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு 6.28 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.14 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. இதுவரை இந்த … Read more

சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அத்துமீறி செயல்படும் காவல் துறை: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

திருப்புவனம்: ​காவல் துறை​யினர் சட்​டத்தை கையில் எடுத்​துக்​கொண்​டு, அத்​து​மீறி செயல்​படு​கின்​றனர் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் தெரி​வித்​தார். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனத்​தில் தனிப்​படை போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்த மடப்​புரத்​தைச் சேர்ந்த அஜித்​கு​மார் குடும்​பத்​தினரை நேற்று சந்​தித்த ஓ.பன்​னீர்​செல்​வம், குடும்​பத்​தினருக்கு ரூ.2 லட்​சம் நிதி​யுதவி அளித்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:காவல் துறையினர் சட்​டப்​படி செயல்ப​டா​மல், கொடூர​மான முறை​யில் தாக்​கிய​தில் அஜித்​கு​மார் உயி​ரிழந்துள்ளார். காவல் துறை​யினர் சட்​டத்தை கையில் எடுத்​துக்​கொண்​டு, அத்​து​மீறி செயல்​படு​வது வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்​கது. தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு … Read more

மணிப்பூரில் பெருமளவு ஆயுதங்கள், வெடிபொருள் பறிமுதல்

இம்பால்: இனக்​கல​வரத்​தால் பாதிக்​கப்​பட்ட மணிப்​பூரில் கடந்த பிப்​ர​வரி​யில் குடியரசுத் தலை​வர் ஆட்சி அமல்​படுத்​தப்​பட்​டது. மாநிலத்​தில் அமை​தியை மீட்​டெடுக்​கும் முயற்​சிகளில் ஒன்​றாக, இனக் குழுக்​கள் மறைத்து வைத்​துள்ள ஆயுதங்​களை பாது​காப்பு படை​யினர் பறி​முதல் செய்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில் மணிப்​பூரில் தெங்​னவ்​பால், காங்​போக்​பி, சண்​டேல், சுராசந்த்​பூர் ஆகிய 4 மலைப்​புற மாவட்​டங்​களின் பல்​வேறு இடங்​களில் போலீ​ஸார் ஒருங்​கிணைந்த சோதனை மேற்​கொண்​டனர். இதில் 200-க்​கும் மேற்​பட்ட துப்​பாக்​கி​கள், 3 கையெறி குண்டு லாஞ்​சர்​களை கைப்​பற்​றினர். மேலும் 30 வெடிகுண்​டு​கள், 10 கையெறி … Read more