Amazon Great Freedom Festival Sale 2025: அமேசான் கிரேட் ஃபெஸ்டிவல் விற்பனை தொடங்கிவிட்டது. நேற்று அதாவது ஜூலை 31, 2025 அன்று பிரைம் உறுப்பினர்களுக்கு தொடங்கிய இந்த விற்பனையில், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன், லேப்டாப், ஃப்ரிட்ஜ், டிவி மற்றும் வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் பம்பர் தள்ளுபடியுடன் கிடைக்கின்றன. குறிப்பாக குறைந்த பட்ஜெட்டில் ஒரு புதிய ஸ்மார்ட் டிவியை வாங்க நினைக்கும் நபர்கள் இந்த சேலை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஸ்மார்ட் டிவி வாங்க இந்த விற்பனை ஒரு சிறந்த வாய்ப்பு. ஆம், இந்த விற்பனையில் கோடக், ப்ளூபங்க்ட் மற்றும் தாம்சன் போன்ற பிராண்டுகளின் டிவிகளை அமேசான் ரூ.5,999 தொடக்க விலையில் கொடுக்கிறது. அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2025 இல் சிறந்த பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவிகளில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் ஜியோவுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட JioTele OS உடன் கூடிய முதல் 43 அங்குல கோடக் டிவி ரூ.18,999 சிறப்பு விலையில் கிடைக்கிறது.
Kodak Special Edition Series
Kodak Special Edition Series -il 24 இஞ்ச், 32 இஞ்ச், 40 இஞ்ச் மற்றும் 43 இஞ்ச் ஸ்க்ரீன் ஸ்மார்ட் டிவிகள் கவர்ச்சிகரமான சலுகைகளுடன் விற்பனை செய்யப்படுகின்றன. 24 இஞ்ச் ஸ்க்ரீன் ஸ்மார்ட் டிவியை ரூ.5,999 தொடக்க விலையில் இந்த விற்பனையில் பெறலாம். இந்த டிவியில் பெசல் இல்லாத வடிவமைப்பு மற்றும் யூடியூப், சோனி லிவ், பிரைம் வீடியோ மற்றும் ஜீ5 போன்ற உள்ளமைக்கப்பட்ட செயலிகள் உள்ளன.
கோடக் 9XPRO தொடரில் ஆண்ட்ராய்டு 11OS உள்ளது. 32 இஞ்ச், 40 இஞ்ச், 42 இஞ்ச் மற்றும் 43 இஞ்ச் HD ரெடி மாடல்கள் ரூ.9,999 தொடக்க விலையில் கிடைக்கின்றன. இந்த டிவிகளில் ரியல்டெக் பிராசஸர், டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் உள்ளமைக்கப்பட்ட நெட்ஃபிளிக்ஸ், கூகிள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆகியவை உள்ளன.
65-inch Matrix QLED TV
கோடக்கின் உயர் செயல்திறன் கொண்ட 65-இன்ச் மேட்ரிக்ஸ் QLED டிவி ரூ.41,999 விலையில் விற்பனையில் கிடைக்கிறது. 43 அங்குல திரை டிவியின் விலை ரூ.20,999, 50 இஞ்ச் திரை டிவியின் விலை ரூ.24,999 மற்றும் 55 இஞ்ச் பெரிய டிவியின் விலை ரூ.29,499.
இந்த கோடக் ஸ்மார்ட் டிவி QLED காட்சிகள் மற்றும் 48W டால்பி-இயங்கும் ஒலியை வழங்குகிறது. நேர்த்தியான அமைப்புடன் கூடிய கோடக் மேட்ரிக்ஸ் ஸ்மார்ட் டிவி கூகிள் டிவியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளமைக்கப்பட்ட Chromecast, வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் 10000 க்கும் மேற்பட்ட செயலிகளுக்கான அணுகல் ஆகியவையும் இதில் கிடைக்கும்.
Thomson Android TV Series
Thomson Android TV Series இந்த விற்பனையில் அல்ட்ரா-ஹை டெஃபனிஷன் ரெசல்யூஷன் மற்றும் HDR10 உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 40W சவுண்ட் அவுட்புட் மற்றும் டால்பி MS 12 உடன் வரும் இந்த டிவிகள், டால்பி டிஜிட்டல் பிளஸ் & DTS Trussurround ஆகியவற்றைக் கொண்டுள்ளன. அவை நேர்த்தியான கேமிங் அனுபவத்தை வழங்குகின்றன.
கூகிள் டிவி ஆதரவுடன் கூடிய இந்த ஸ்மார்ட் டிவிகள் உள்ளமைக்கப்பட்ட Chromecast மற்றும் Airplay போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளன. டிவியுடன் வரும் ரிமோட்டில் கூகிள் அசிஸ்டண்ட், நெட்ஃபிக்ஸ், யூடியூப் மற்றும் குரல் தேடலுக்கான கூகிள் பிளே ஆகியவற்றிற்கான தனி பொத்தான்கள் உள்ளன.
Blaupunkt Smart TV
அமேசான் விற்பனையில் Blaupunkt ஸ்மார்ட் டிவியும் கவர்ச்சிகரமான சலுகைகளுடன் விற்பனையில் கிடைக்கிறது. 55-இன்ச் மற்றும் 65-இன்ச் பெரிய திரை வகைகள் 70W அவுட்புட்டை வழங்கும் 4 ஸ்பீக்கர்களுடன் வருகின்றன. 50-இன்ச் மாடல் 50W சவுண்ட் அவுட்புட் கொண்ட 2 ஸ்பீக்கர்களுடன் வருகிறது. 75 அங்குல டிவி மாடலை ரூ.69,999 விலையில் வாங்கலாம்.
Thomson Tv 24 Alpha 001
கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேலில் தாம்சன் டிவி 24 ஆல்பா 001 மாடலை ரூ.5,899க்கு வாங்கலாம். மேலும் Thomson Tv 24 Alpha Q001 மாடலை ரூ.5,999க்கு வாங்கலாம்.
4K டிஸ்ப்ளேவுடன் வரும் THOMSON Google TVகளில் HDR10+ ஆதரவு, Dolby Atmos, Dolby Digital Plus, TruSurround, 40W Dolby Audio Stereo Box Speakers, 2GB RAM, 16GB ROM, Dual Band போன்ற அம்சங்கள் உள்ளன. Thomson இன் இந்த QLED TVகளில் HDR10+, Dolby Atmos, Dolby Digital Plus, DTS TruSurround, bezel-less design, 40W Dolby Audio Stereo Box Speaker, 2GB RAM, 16GB சேமிப்பு, dual band, Google TV ஆகியவை கிடைக்கின்றன.
இந்த அமேசான் சேலில் TH75QDMini1044 Thomson TV ரூ.95,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. TH65QDMini1022 ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.64,999