T Natarajan at super kings academy: யார்க்கர் கிங் என ரசிகர்களால் அழைப்படுபவர் டி. நடராஜன். இவர் தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருக்கிறார். அதேபோல் TNPL-லில் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில், டி. நடராஜன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி செய்து வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருக்கும் நடராஜன் எதற்காக சென்னை சேப்பாக்கத்தைல் பயிற்சி செய்கிறார் என்ற கேள்வி எழும்பி உள்ளது.
சென்னை மைதானத்திற்கு ஏன் வந்தார்?
வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜன், யார்க்கருக்கு பெயர் பெற்றவர், டி20 போட்டிகளிலும் அவர் எக்காணமியாக பந்து வீசக் கூடியவர். அவர் ஐபிஎல் தொடரில் 2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னணி பந்து வீச்சாளராக இருந்து வந்த நிலையில், கடந்த 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி அவரை 10 கோடிக்கு வாங்கியது. ஆனால் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணி அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இது தொடர்பாக சர்ச்சைகளும் அப்போது எழுந்தன. அவரை பெரும் தொகைக்கு வாங்கிவிட்டு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்று பலரும் கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருக்கும் நடராஜன் ஏன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வருகிறார் என்ற கேள்வி எழும்பி உள்ளது. இதற்கு பல காரணங்களும் சொல்லப்படுகின்றன. அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமியில் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான உயர்தர வசதிகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் தனது சொந்த மாநிலம் என்பதால், நடராஜன் இங்குள்ள நியுணர்களின் அறிவுரையின் படி தயாராகி வருவாதாகவும் சொல்லப்படுகிறது.
சிஎஸ்கேவுக்கு மாறுகிறாரா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் கடுமையாக சொதப்பிய நிலையில், வர உள்ள 2026 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இதற்கு சென்னை அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது. பல வீரர்களை டிரேட் செய்யும் திட்டத்திலும் அந்த அணி உள்ளது. இந்த நிலையில், நடராஜன் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டுள்ளது, அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்படுகிறாரா என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சிஎஸ்கே அணிக்கும் நடராஜன் போன்ற அனுபவமிக்க வீரர் தேவை இருக்கிறது. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடராஜனை டிரேட் செய்யலாம் என கூறப்படுகிறது. மறுபக்கம், வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் பயிற்சி மேற்கொள்வது அணி மாறும் விஷயமாக இல்லாமல், அவர் காயத்தில் இருந்து மீள்வதற்கு அவர் மேற்கொள்ளும் தீவிர பயிற்சியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிங்க: ஸ்ரேயாஸ் ஐயர் காதலிகள் லிஸ்ட்.. யுஸ்வேந்திர சஹாலின் EX-மனைவியுமா?
மேலும் படிங்க: ஆஸ்திரேலியா தொடரில் விளையாடும் வைபவ் சூர்யவன்ஷி? பிசிசிஐ திட்டம்!