Ind vs Eng 5th Test: இந்தியா டெஸ்ட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் தொடர் விளையாடி வருகிறது. இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது 5வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வரும் நிலையில், இப்போட்டியை வென்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் விளையாடி வருகிறது. அதே சமயம், இந்திய அணி இப்போட்டியை வென்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடி வருகிறது.
இருப்பினும் இப்போட்டியில் பும்ரா விளையாடாதது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பும்ரா பணிச்சுமை காரணமாக அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே பும்ரா 3 போட்டிகளில்தான் விளையாடுவார் என கூறப்பட்டது. அதன் படி அவருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜஸ்பிரித் பும்ரா நிச்சயமாக 5வது போட்டியில் விளையாடி இருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிஒச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த கால இந்திய டெஸ்ட் அணியாக இருந்திருந்தால், ஜஸ்பிரித் பும்ரா நிச்சயம் இறுதி போட்டியில் விளையாடி இருப்பார். பும்ராவை விளையாட அணி நிர்வாகம் வற்புறுத்தி இருப்பார்கள். ஆனால் தற்போது நிர்வாகம் அதை விரும்பவில்லை. ஜஸ்பிரித் பும்ராவின் பார்வையில் இது சரியான முடிவு என பார்க்கிறார் என கூறினார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி இருக்கும் நிலைமைக்கு நிச்சயம் பும்ரா இருந்திருக்க வேண்டும் என அஸ்வின் குறிப்பிட்டார். அவர் கூறியதுபோல் பும்ரா இருந்திருந்தால், உண்மையில் இந்திய அணி கூடுதல் பலமாக இருந்திருக்கும். ஏனெனில் 5வது போட்டி நடக்கும் ஓவல் மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளது. பும்ரா இருந்திருந்தால், இங்கிலாந்து அணியின் பேட்டர்களை விரைவில் வீழ்த்த உதவியிருப்பார் என பலரும் கூறி வருகின்றனர்.
மேலும் படிங்க: 2011ஆம் ஆண்டுக்கு பின் இவர்தான்.. ஆகாஷ் தீப் சாதனை படைப்பு!
மேலும் படிங்க: ஸ்ரேயாஸ் ஐயர் காதலிகள் லிஸ்ட்.. யுஸ்வேந்திர சஹாலின் EX-மனைவியுமா?