பும்ராவை விட அதிக சம்பளம் வாங்கும் சிராஜ்! எப்படி தெரியுமா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் 247 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா நான்கு விக்கெட்களை எடுத்துள்ளனர். இரண்டாவது இன்னிங்ஸில் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லாத நிலையில் சிராஜ் தலைமை பந்துவீச்சாளராக அணியை வழிநடத்தி சென்று கொண்டு உள்ளார். 

மேலும் படிங்க: பாத்ரூமில் கதறி அழுத விராட் கோலி.. 2019ல் நடந்தது என்ன?

இங்கிலாந்து தொடரில் சிராஜ் 

கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் முகமது சிராஜ் அனைத்து போட்டிகளிலும் இந்தியாவிற்காக விளையாடி உள்ளார். பும்ரா இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் ஓய்வு பெற்ற நிலையில் சிராஜ் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். கிட்டத்தட்ட இதுவரை 155 ஓவர்கள் வீசி உள்ள சிராஜ் 18 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய ஒரே வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் மட்டுமே. 

முகமது சிராஜ் சம்பளம் 

முகமது சிராஜ் பிசிசிஐயின் கிரேடு ஏ பிரிவில் உள்ளார். இதன் மூலம் வருடத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார். மேலும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு சிராஜ் 15 லட்சம் சம்பளமாக பெறுகிறார். இங்கிலாந்து தொடரில் 5 போட்டிகளிலும் விளையாடி உள்ள முகமது சிராஜ் மொத்தமாக 75 லட்சம் சம்பளமாக பெற உள்ளார். பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ள நிலையில் அவர் 45 லட்சம் மட்டுமே சம்பளமாக பெற உள்ளார். இதன் மூலம் பும்ராவை விட சிராஜ் இங்கிலாந்து தொடரில் அதிக வருமானம் பெற உள்ளார். அதே போல ஒரு வீரர் 75% டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படும் என்றும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்து இருந்தது.

இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓவர்கள் வீசிய இந்திய வீரர்கள்!

முகமது சிராஜ் – 6 போட்டிகள், 167.0 ஓவர்கள், 18 விக்கெட்டுகள்
ரவீந்திர ஜடேஜா – 6 போட்டிகள், 139.1 ஓவர்கள், 7 விக்கெட்டுகள்
ஜஸ்பிரித் பும்ரா – 4 போட்டிகள், 129.4 ஓவர்கள், 16 விக்கெட்டுகள்
பிரசித் கிருஷ்ணா – 4 போட்டிகள், 89.0 ஓவர்கள், 12 விக்கெட்டுகள்
ஆகாஷ் தீப் – 3 போட்டிகள், 72.1 ஓவர்கள், 11 விக்கெட்டுகள்

இங்கிலாந்து தொடரில் அதிக ஓவர்கள் வீசிய வீரர்கள்

முகமது சிராஜ் – 139 ஓவர்கள், 14 விக்கெட்டுகள்
ரவீந்திர ஜடேஜா – 136.1 ஓவர்கள், 7 விக்கெட்டுகள்
ஜஸ்பிரித் பும்ரா – 119.4 ஓவர்கள், 14 விக்கெட்டுகள்
ஆகாஷ் தீப் – 72.1 ஓவர்கள், 11 விக்கெட்டுகள்
வாஷிங்டன் சுந்தர் – 70.1 ஓவர்கள், 7 விக்கெட்டுகள்

2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ஓவர்கள் வீசிய பவுலர்

ரவீந்திர ஜடேஜா – 20 போட்டிகள், 554.2 ஓவர்கள், 62 விக்கெட்டுகள்
முகமது சிராஜ் – 22 போட்டிகள், 527.1 ஓவர்கள், 62 விக்கெட்டுகள்
ஜஸ்பிரித் பும்ரா – 18 போட்டிகள், 513.2 ஓவர்கள், 91 விக்கெட்டுகள்
ஆர். அஷ்வின் – 14 போட்டிகள், 445.3 ஓவர்கள், 63 விக்கெட்டுகள்
ஆகாஷ் தீப் – 10 போட்டிகள், 219 ஓவர்கள், 26 விக்கெட்டுகள்

மேலும் படிங்க: இனி பும்ரா டெஸ்ட்டில் விளையாடா மாட்டாரா? பிசிசிஐ முடிவால் வந்த சிக்கல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.