லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘கூலி’ திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.
ஆமீர் கான், நாகர்ஜூனா, செளபின் சாஹிர் என படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரும் இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிறார்கள்.

அனிருத் இசையில் உருவாகியிருக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான சில ஹைலைட்ஸை மட்டும் பார்ப்போமா….
துறைமுகத்தில் பணிகளைக் கவனிக்கும் கூலி தொழிலாளியாக இருக்கும் தேவா (ரஜினி) பிரச்னைகளுக்குத் தீர்வுகளைத் தேடிக் கொடுப்பவராக இந்த டிரெய்லரில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கன்னட நடிகர் உபேந்திராவும் கூலி தொழிலாளர்களில் ஒருவராக இருக்கிறார். படத்தில் நாகர்ஜூனா, செளபின் சாஹிர், ஆமீர் கான் என அனைவருமே பெரிய நெட்வொர்க் கும்பல்களைக் கட்டி ஆளும் வில்லன்களாகவே வருகிறார்கள்.

ரஜினியின் நண்பராக சத்யராஜ் வருகிறார். சத்யராஜின் மகளாக வரும் ஷ்ருதி ஹாசனின் ப்ரீத்தி கதாபாத்திரத்தில் சில எமோஷனல் டச்சையும் வைத்திருக்கிறார் லோகேஷ். ரஜினி படங்களின் டிரெய்லர்களில் வரும் பன்ச் வசனங்களை இந்த டிரெய்லரில் மொத்தமாக தவிர்த்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ‘பாட்ஷா’ படத்தில் ப்ளாஷ்பேக் காட்சி குறித்தான விவரிப்பைச் சொல்கையில் வரும் அந்தவொரு நெகடிவ் டோனை இதிலும் பயன்படுத்தியிருப்பதாக டிரெய்லரில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…