ஆபாச பட தளத்தில் Ex ஆர்சிபி வீரர்… 'யோவ் மில்ட்ரி நீ எங்க இங்க…' ரசிகர்கள் ஷாக்!

Tymal Mills Joined OnlyFans: 12 மணிநேரத்தில் 1000க்கும் அதிகமான ஆண்களுடன் உடலுறவு மேற்கொண்டேன், 24 மணிநேரத்தில் இத்தனை ஆண்களுடன் மேற்கொண்டேன் என இதுபோன்று பல ஆபாச பட மாடல்கள் கடந்த சில மாதங்களாகவே சொல்லி வருகிறார்கள். 

மேலும் இதுபோன்ற செயல்களை வைத்து லட்சக்கணக்கில் பணமும் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இவர்கள் OnlyFans என்ற தளத்தின் மூலமே அதிகம் வருவாய் ஈட்டுவதாக கூறப்படுகிறது. அதாவது, OnlyFans என்ற இணையதளம் ஆபாச வீடியோக்கள், ஆபாச புகைப்படங்களுக்காக மட்டுமே அறியப்பட்டது எனலாம்.

அப்படி பெயர் பெற்ற இந்த OnlyFans தளத்தில் இப்போது பிரபல கிரிக்கெட் வீரர் கால் பதித்துள்ளார் என்பதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் பலராலும் இதை நம்பவும் முடியவில்லை. இந்த கிரிக்கெட் வீரர் ஐபிஎல் தொடரிலும் விளையாடியிருக்கிறார். அந்த வகையில், OnlyFans தளத்தில் இணைந்த அந்த கிரிக்கெட் வீரர் யார், அவர் ஏன் இந்த தளத்தில் இணைந்துள்ளார், அவரின் நோக்கம் என்ன ஆகியவற்றை இங்கு காணலாம். 

Tymal Mills: யார் இந்த டைமல் மில்ஸ்?

32 வயதான இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டைமல் மில்ஸ் (Tymal Mills) என்ற கிரிக்கெட் வீரர்தான் OnlyFans தளத்தில் அவருக்கு என பிரத்யேக பக்கத்தை திறந்துள்ளார். இடது கை வேகப்பந்துவீச்சாளரான இவர் இங்கிலாந்து அணிக்காக 2016ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையில் 16 டி20ஐ போட்டிகளை விளையாடி உள்ளார்.

Tymal Mills: ஆர்சிபி, மும்பை அணியில் டைமல் மில்ஸ்

மேலும், டைமல் மில்ஸ் ஐபிஎல் தொடரில் 2017 சீசனில் ஆர்சிபி அணிக்காக 5 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். ஆர்சிபி இவரை ரூ.12 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. மேலும், 2022ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார், இவரை மும்பை ரூ.1.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. மொத்தமே ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். இவர் தொடர்ந்து பல டி20 தொடர்களிலும் விளையாடி வருகிறார். 

Tymal Mills: OnlyFans தளத்தில் இணைந்தது ஏன்?

இந்தச் சூழலில்தான், ஆபாச படங்களின் தளமாக அறியப்படும் OnlyFans தளத்தில் டைமல் மில்ஸ் கணக்கை தொடங்கி உள்ளார். ஆனால் இதுகுறித்து அவர் அளித்த விளக்கத்தில், “ஆயிரம் சதவீதம் தெளிவாகச் சொல்கிறேன், கவர்ச்சிகரமான புகைப்படங்கள் எதுவும் இருக்காது. இது முழுக்க முழுக்க கிரிக்கெட் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்தது. இது ஒரு புதிய பகுதி, ஆனால் இது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது” என்றார். 

“அந்த தளம் ஆபாச படங்களுக்கு மிகவும் பிரபலமானது என்பதை நான் மறைக்கவில்லை, ஆனால் நான் இங்கு என்ன செய்யப்போகிறேன் என்பது அதில் இருந்து பெரிய வித்தியாசம் இருக்கும். இங்கு (கிரிக்கெட்) ரசிகர்களுடனும், உங்களுடன் தொடர்புகொள்ள நினைக்கும் பொதுமக்களிடம் இருந்தும் நீங்கள் நேரடித் தொடர்பைப் பெறவீர்கள். வீரர்கள் ஊடகங்களில் விளையாட்டு குறித்து முன்னும் பின்னும் பேச வேண்டியதாக உள்ளது. ஆனால் அது பெரும்பாலும் அலங்காரமாக, பொதுவான விஷயமாகவே இருக்கும். நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் பற்றிப் பேச இந்த தளத்தைப் பயன்படுத்த விரும்புகிறேன். மேலும் ஒரு கிரிக்கெட் வீரராக வாழ்க்கையின் நன்மை தீமைகளை விளக்க வீடியோக்கள் மற்றும் படங்களைப் பயன்படுத்தலாம்” என்றார்.

Tymal Mills: சந்தா எவ்வளவு?

மேலும் OnlyFans தளத்தில் நீங்கள் ஒரு பக்கத்தை அணுக வேண்டும் என்றால் அதற்கு என தனி சந்தா கட்டணத்தை செலுத்த வேண்டும். அப்படியிருக்க, கட்டணம் குறித்து டைமல் மில்ஸ் பேசுகையில், “நாங்கள் இன்னும் அதை முடிவு செய்யவில்லை. ஆனால் இப்போதைக்கு இலவசம், பின்னர் நீங்கள் சில விஷயங்களுக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும். நான் மக்களை விலைக்கு வாங்க விரும்பவில்லை” என்றார். 

இவர் விளையாட்டுத்துறை சார்ந்த பத்திரிகை மாணவராகவும் இருந்துள்ளார். மேலும், BBC, SkySports, TalkSPORT போன்ற ஊடகங்களிலும் பணியாற்றி உள்ளார். கிரிக்கெட் விளையாடாத போதெல்லாம் நாளிதழ்களில் கிரிக்கெட் குறித்து கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். இனி சர்வதேச போட்டிகளில் தன் விளையாடுவதற்கு சாத்தியமே இல்லை என கூறும் டைமல் மில்ஸ், முழு மனதுடன் OnlyFans தளத்தில் இயங்கப்போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | Sai Sudharsan: சாய் சுதர்சனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மேலும் படிக்க | ஓய்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தோனி! சோகத்தில் ரசிகர்கள்!

மேலும் படிக்க | Chahal hurt by Rohit Wife: ரோகித் சர்மா மனைவி செய்த இந்த காரியம்.. சாஹல் வருத்தம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.