இந்தியாவுக்கு எதிராக சதம்: சங்கக்கராவை பின்னுக்கு தள்ளிய ஜோ ரூட்

லண்டன்,

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களில் சுருண்டது.இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்தது. இது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 23 ரன்கள் கூடுதலாகும். 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து 374ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் விளையாடியது தொடக்கம் முதல் பென் டக்கெட் , ஜாக் கிராலி இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் . தொடக்க விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக் கிராலி 14 ன்களுக்கு முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இறுதியில் நேற்று 3வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்தது .இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. பென் டக்கெட் அரை சதம் கடந்து 54 ரன்னில் அவுட்டானார். ஆலி போப் 27 ரன்னில் வெளியேறினார்.ஜோ ரூட் உடன் ஹாரி புரூக் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் சதம் கடந்தனர்.4வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்த நிலையில் ஹாரி புரூக் 111 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 105 ரன்னில் வெளியேறினார்.மழை காரணமாக ஆட்டம் சிறிது தடைபட்டது.இறுதியில், நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றிபெற 35 ரன்கள் தேவை.இந்தியா வெற்றிபெற 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்பதால் நாளை நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்,இந்த போட்டியில் 105 ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் 34 வயதான ஜோ ரூட்டுக்கு இது 39-வது சதமாகும். அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் இலங்கையின் சங்கக்கராவுடன் (38 சதம்) 4-வது இடத்தை பகிர்ந்து இருந்த ஜோ ரூட் தற்போது அவரை பின்னுக்கு தள்ளிவிட்டு, தனியாக 4-வது இடம் வகிக்கிறார். டாப்-3 இடங்களில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (51 சதம்), தென்ஆப்பிரிக்காவின் காலிஸ் (45), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (41) ஆகியோர் உள்ளனர்.

இந்தியாவுக்கு எதிராக ஜோ ரூட்டின் 13-வது சதம் இதுவாகும். குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் விளாசிய சாதனையாளர் வரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுனில் கவாஸ்கரை (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 13 சதம்) சமன் செய்துள்ளார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் (இங்கிலாந்துக்கு எதிராக 19 சதம்) உள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.