டொராண்டோ,
கனடா ஓபன் டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஆண்ட்ரேஎ ரூப்லெவ் (ரஷியா), ஸ்பெயினின் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் போகினா உடன் மோதினார்.
இந்த போட்டியின் முதல் செட்டை 7-6 (7-3) என்ற புள்ளிக்கணக்கில் டேவிடோச்சும், 2வது செட்டை 7-6 (7-2) என்ற புள்ளிக்கணக்கில் ரூப்லெவும் கைப்பற்றினர். தொடர்ந்து நடைபெற்ற 3வது செட்டில் 3-0 என்ற புள்ளிக்கணக்கில் ரூப்லெவ் முன்னிலையில் இருந்த போது டேவிடோவிச் காயம் அடைந்தார்.
தொடர்ந்து அவரால் ஆட முடியாத காராணத்தினால் டேவிடோவிச் போட்டியில் இருந்து வெளியேறினார். இதன் காரணமாக ரூப்லெவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.