சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் விலகல்

சின்சினாட்டி,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னோட்டமாக சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நாளை (7-ந் தேதி) முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் இருந்து 24 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவரும், சின்சினாட்டி போட்டியில் 3 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) விலகி இருக்கிறார். 38 வயதான ஜோகோவிச் இந்த சீசனில் 35 ஆட்டங்களில் ஆடி 26 வெற்றி, 9 தோல்வி கண்டுள்ளார். கடந்த மே மாதம் ஜெனீவாவில் நடந்த சர்வதேச போட்டியில் தனது 100-வது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அவர் அடுத்து நடந்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளான பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டனில் அரைஇறுதியில் தோற்று வெளியேறினார். அதன் பிறகு அவர் எந்த போட்டியிலும் களம் இறங்கவில்லை. இருப்பினும் அமெரிக்க ஓபனில் விளையாடி 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைக்க முயற்சிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.