Team India: ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்திய அணியில் எப்போது வரை இருப்பார்கள் என்பதே கடந்த சில நாட்களின் பேச்சாக உள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக இருவருமே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதன் பின் நடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர்கள் இல்லாததையே பல ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களின் ஒரே நிம்மதி சரி ஒருநாள் கிரிக்கெட்டிலாவது அவர்கள் இருவரையும் பார்க்கலாம் என்பதுதான். ஆனால் அதிலும் அவர்கள் இரண்டு பேர் எப்போது வரை நீட்டிப்பார்கள் என்பது தெரியவில்லை.
அவர்கள் இருவரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை விளையாட விருப்பம் தெரிவித்துள்ளனர். அத்தொடருக்கு பின்னர் அவர்கள் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒருநாள் உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளதாலும், அதற்குள் அவர்கள் 40 வயதை நெருங்கி விடுவார்கள் என்பதாலும் இவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கிடையில், பிசிசிஐ இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புவதால், இவர்கள் இருவரையும் அணியில் இருந்து கழட்டிவிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற வீரர்கள் ஈடு செய்வார்கள்
இந்த நிலையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசி உள்ளார். அவர் கூறியதாவது, இந்திய கிரிக்கெட் யாருக்காகவும் நிற்கப்போவதில்லை. இங்கு நிறைய திறமைசாலிகள் உள்ளனர். ஒவ்வொரு ஜாம்பவான் வீரர்கள் ஓய்வு பெறும்போதும் வேறொரு வீரர்கள் அவர்களின் இடைத்தை நிரப்பி வருகிறார்கள். உதாரணத்திற்கு சுனில் கவாஸ்கர் வெளியேறும்போது சச்சின் டெண்டுல்கர் வந்தார். பின்னர் சேவாக், டிராவிட், விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் வெளியேறும்போது, விராட் கோலி, புஜாரா, ரஹானே, ரோகித் போன்றோர்கள் வந்தார்கள்.
தரமான வீரர்கள் உள்ளனர்
தற்போது ரோகித், விராட் ஆகியோ வெளியேறும் பட்சத்தில், கில், ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு வீரர்கள் வெளியேறுகையில் அடுத்த வீரர்கள் அவர்களின் இடத்தை நிரப்ப தயாராக இருக்கிறார்கள். இந்தியாவில் ஐபிஎல், உள்ளூர் தொடர், அண்டர் 19, இந்தியா ஏ அணி என பல போட்டிகள் நடைபெறுகின்றன. எனவே இதன் மூலம் நல்ல தரமான வீரர்களை இந்திய அணிக்கு கொண்டு வர முடியும் என கங்குலி கூறினார்.
மேலும் படிங்க: ரோகித் வேண்டாம்.. இந்த வீரரை ODI கேப்டன் ஆக்குங்க! பெருகும் ஆதரவு
மேலும் படிங்க: ஆசிய கோப்பை 2025: சூர்யகுமார் கேப்டன் இல்லை…? இந்திய அணியின் ஸ்குவாட் இதுதான்