CSK to release several players: நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடியது. 14 லீக் போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி அத்தொடரில் இருந்து முதல் அணியாக சென்னை அணி வெளியேறியது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால், ஐபிஎல் வரலாற்றிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்படி படுமோசமாக விளையாடியது அல்ல.
2026ல் சிறப்பாக செயல்பட திட்டம்
இதன் காரணமாக வரும் 2026ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யோசித்து அதற்கேற்றவாறு பல திட்டங்களையும் தீட்டி வருகிறது. அதாவது டிசம்பரில் நடக்க இருக்கும் மினி ஏலத்தில் சில வீரர்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பல முன்னணி வீரர்களை அணியை விட்டு அனுப்ப சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஸ்வினை போல் பல வீரர்கள் அனுப்ப திட்டம்
அந்த வகையில், முதலில் தமிழக வீரர் அஸ்வின் சிஎஸ்கே அணியை விட்டு வெளியேறி இருக்கிறார். அவரே முன் அணியை விட்டு செல்வதாக கூறி இருக்கிறார். மெகா ஏலத்தில் அஸ்வினை சிஎஸ்கே அணி 9 கோடியே 75 லட்சம் கொடுத்து வாங்கியது. இந்த நிலையில், அஸ்வினை தொடர் பல முன்னணி வீரர்களை சிஎஸ்கே அணி கழட்டிவிட இருக்கிறது. அதாவது, நியூசிலாந்து வீரர் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா, ராகுல் திருப்பாதி குர்ஜ்பனீத் சிங், தீபக் ஹூடா, ஜெமி ஓவர்டன் உள்ளிட்ட வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அனுப்ப உள்ளது.
சஞ்சு சாம்சன்?
இந்த வீரர்களை அனுப்புவதன் மூலம் சென்னை அணி ரூ.30 கோடிக்கு மேல் கிடைக்கும். அதேபோல் மினி ஏலத்தின் போது, ஒவ்வொரு அணிக்கும் ரூ. 5 கோடி கொடுக்கப்படும். இதனால் சென்னை அணிக்கும் ரூ. 35 கோடிக்கு மேல் நடக்கும். இதனை வைத்து சிஎஸ்கே அணி மற்ற வீரர்களை ட்ரேட் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிங்க: பெங்களூருவில் புதிய கிரிக்கெட் மைதானம்.. சின்னசாமி ஸ்டேடியத்திற்கு குட்-பை.. கர்நாடக அரசு அதிரடி!
மேலும் படிங்க: இந்த 3 வீரர்களுக்கு இனி டெஸ்ட் அணியில் வாய்ப்பு இல்லை! பிசிசிஐ அதிரடி!