குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: இண்டியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளர்; கட்சிகளுடன் கார்கே பேச்சுவார்த்தை

புதுடெல்லி: குடியரசு துணைத் தலை​வர் பதவிக்​கான தேர்​தலில் இண்​டியா கூட்​டணி சார்​பில் பொது வேட்​பாளரை நிறுத்த முடிவு செய்​யப்​பட்டு உள்​ளது. இது தொடர்​பாக காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, பல்​வேறு கட்​சிகளின் தலை​வர்​களு​டன் தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறார்.

குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் கடந்த ஜூலை 21-ல் ராஜி​னாமா செய்​தார். இதையடுத்​து, வரும் செப். 9-ம் தேதி குடியரசு துணைத் தலை​வர் பதவிக்கு தேர்​தல் நடை​பெறும் என்று தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

இதற்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த 7-ம் தேதி தொடங்​கியது. வரும் 21-ம் தேதிக்​குள் வேட்​புமனுக்​களை தாக்​கல் செய்ய வேண்​டும். வரும் 22-ம் தேதி வேட்​புமனுக்​கள் மீதான பரிசீலனை நடை​பெறும். வேட்​புமனுக்​களை திரும்​பப் பெற ஆக. 25-ம் தேதி கடைசி நாள் என்று தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

இந்த சூழலில், குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலுக்​கான வேட்​பாளரை தேர்வு செய்​வது தொடர்​பாக தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் ஆலோ​சனைக் கூட்​டம் டெல்​லி​யில் நடை​பெற்​றது. இதில், வேட்​பாளரை தேர்வு செய்​யும் அதி​காரம் பிரதமர் நரேந்​திர மோடி, பாஜக தலை​வர் ஜே.பி. நட்டா ஆகியோ​ருக்கு வழங்​கப்​பட்​டது. பாஜக தரப்​பில் குஜ​ராத் ஆளுநர் ஆச்​சார்ய தேவ்​விரத், கர்​நாடக ஆளுநர் தாவர்​சந்த் கெலாட், சிக்​கிம் ஆளுநர் ஓம் மாத்​தூர் மற்​றும் மாநிலங்​களவை துணைத் தலை​வர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் உள்​ளிட்​டோரின் பெயர்​கள் பரிசீலிக்​கப்​பட்டு வரு​வ​தாகத் தெரி​கிறது. வரும் 13-ம் தேதி முதல் 20-ம்தேதிக்​குள் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் குடியரசு துணைத் தலை​வர் வேட்​பாளர் அறிவிக்​கப்​படு​வார் என்று பாஜக வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

இந்​நிலை​யில், இண்​டியா கூட்​ட​ணி​யின் உயர்​நிலை ஆலோ​சனைக் கூட்​டம் கடந்த 7-ம் தேதி டெல்​லி​யில் நடை​பெற்​றது. மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி தலை​மை​யில் நடை​பெற்ற இந்​தக் கூட்​டத்​தில் காங்​கிரஸ், சமாஜ்​வா​தி, ராஷ்டிரிய ஜனதா தளம், திரிண​மூல் காங்​கிரஸ், திமுக, தேசிய மாநாடு, பிடிபி, சிவசேனா (உத்​தவ் அணி), தேசி​ய​வாத காங்​கிரஸ் (சரத்பவார் அணி) உட்பட 25 கட்​சிகளின் தலை​வர்​கள் பங்​கேற்​றனர். இந்​தக் கூட்​டத்​தில் இண்​டியா கூட்​டணி சார்​பில் குடியரசு துணைத் தலை​வருக்​கான பொது வேட்​பாளரை நிறுத்த முடிவு செய்​யப்​பட்​டது.

இதுதொடர்​பாக காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, கூட்​ட​ணி கட்​சிகளின் தலை​வர்​களு​டன் தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறார். அவர்​களின் விருப்​பங்​களை கேட்​டறிந்த பிறகு, ஒரு​மித்த கருத்​தின் அடிப்​படை​யில் பொது வேட்​பாளர் தேர்வு செய்​யப்​படு​வார்என்று தெரி​கிறது.

தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் வேட்​பாளர் அறிவிக்​கப்​பட்ட பிறகே, இண்​டியா கூட்​ட​ணி​யின் வேட்​பாளர் முடிவு செய்​யப்​படு​வார் என்று காங்​கிரஸ் வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. இது தொடர்​பாக பாஜக வட்​டாரங்​கள் கூறிய​தாவது: தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் பொது வேட்​பாளர் நிறுத்​தப்​படு​வார். இது குறித்து பாஜக தலை​வர் நட்​டா, கூட்​டணிக் கட்சி தலை​வர்​களு​டன்பேச்​சு​வார்த்தை நடத்தி வருகிறார்.

எங்​கள் கூட்​ட​ணி​யின் வேட்​பாளரே குடியரசு துணைத் தலை​வ​ராக தேர்வு செய்​யப்​படு​வார். எனவே, வேட்​பாளர் விவ​காரத்​தில் மிகுந்த கவனம் செலுத்தி வரு​கிறோம். நாடாளு​மன்ற அனுபவம் இருக்க வேண்​டும். மாநிலங்​களவையை திறம்பட வழிநடத்த வேண்​டும் என்​ப​தால், பல்​வேறு மூத்த தலை​வர்​களின் பெயர்​களை பரிசீலனை செய்து வரு​கிறோம். குஜ​ராத், கர்​நாட​கா, சிக்​கிம், காஷ்மீர் மாநிலங்​களின் தற்​போதைய ஆளுநர்​கள் மற்​றும் பல்​வேறு முன்​னாள் ஆளுநர்​கள், நாடாளு​மன்ற அனுபவம்​மிக்க பாஜக மூத்த தலை​வர்​களின் பெயர்​கள் பரிசீலனை​யில் உள்​ளன. பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பைச் சேர்ந்த சில பெண் தலை​வர்​களின் பெயர்​களும் பரிசீலிக்​கப்​படு​கின்​றன.

தற்​போது பழங்​குடி​யினத்தை சேர்ந்த திர​வுபதி முர்மு குடியரசுத் தலை​வ​ராக பதவி வகிக்​கிறார். இதே​போல, குடியரசு துணைத் தலை​வர் பதவிக்​கான வேட்​பாளர் தேர்​வும் ஆச்​சரி​யம் அளிக்​கும் வகை​யில் இருக்​கும். இவ்​வாறு பாஜக வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

வாக்​கெடுப்பு நடை​முறை என்ன? – மாநிலங்​களவை செய​லா​ளர் பி.சி. மோடி, குடியரசு துணைத் தலை​வர் பதவி தேர்​தலுக்​கான அதி​காரி​யாக நியமிக்​கப்​பட்டு உள்​ளார். இணைச் செய​லா​ளர் கரிமா ஜெயின், மாநிலங்​களவை செயலக இயக்​குநர் விஜய்​கு​மார் ஆகியோர் உதவி தேர்​தல் அதி​காரி​களாக நியமிக்​கப்​பட்டு உள்​ளனர்.

தேர்​தலில் போட்​டி​யிட விரும்​பும் வேட்​பாளர்​கள், அவர்​களிடம் வேட்​புமனுக்​களை தாக்​கல் செய்ய வேண்​டும். ஒரு வேட்​பாளரை குறைந்​த​பட்​சம் 20 எம்​.பி.க்​கள் முன்​மொழிய வேண்​டும். இந்த தேர்​தலில் மக்​களவை மற்​றும் மாநிலங்​களவை எம்​.பி.க்​கள் மட்​டுமே வாக்​களிக்க முடி​யும். நாடாளு​மன்ற வளாகத்​தில் செப்​டம்​பர் 9-ம் தேதி தேர்​தல் நடை​பெறும். அன்​றைய தினமே முடிவு​கள் அறிவிக்​கப்​படும். மக்​களவை​யில் 543 எம்​.பி.க்​கள், மாநிலங்​களவை​யில் 233 எம்​.பி.க்​கள், 12 நியமன எம்​.பி.க்​கள் இடங்​கள் உள்​ளன. ஒட்​டுமொத்​த​மாக 788 எம்​.பி.க்​கள் குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் வாக்​களிக்க தகுதி உடைய​வர்​கள்.

தற்​போது மக்​களவை​யில் ஒரு எம்​.பி., மாநிலங்​களவை​யில் 5 எம்​.பி.க்​கள் இடங்​கள் காலி​யாக உள்​ளன. எனவே, வரும் தேர்​தலில் 782 பேர் மட்​டுமே வாக்​களிக்க உள்​ளனர். தேர்​தலில் வெற்றி பெற 50 சதவீத எம்​.பி.க்​களின் ஆதரவுதேவை. இதன்படி 391 எம்.​பி.க்​களின் ஆதரவை பெறும் வேட்​பாளர், புதிய குடியரசு துணைத் தலை​வ​ராக தேர்வு செய்​யப்​படு​வார். நாடாளு​மன்​றத்​தில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு 422 எம்​.பி.க்​கள், எதிர்க்​கட்​சிகளின் இண்​டியா கூட்​ட​ணிக்கு 312 எம்​.பி.க்​களின் பலம் உள்​ளது. ஆளும் பாஜக கூட்​ட​ணிக்கு பெரும்​பான்மை பலம் இருப்​ப​தால், அந்த கூட்​ட​ணி​யின் வேட்​பாளர் வெற்றி பெறு​வது உறுதி என்று அரசி​யல் நோக்​கர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.