பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 10-வது நாளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அமைச்சர் சேகர் பாபு தலைமையில் போராட்டக்குழு நடத்திய பல கட்டப் பேச்சுவார்த்தைகளில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை.

‘கெட்டப் பேராகுது; கலைஞ்சு போங்க!’ – கண்டிஷன் போடும் அமைச்சர் சேகர் பாபு? முறிந்த பேச்சுவார்த்தை
இந்தச் சூழலில் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு சீமான், கி.விரமணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் இப்போராட்டத்திற்கு ஆதரவு தந்து போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு அவசரமாக தண்ணீர் தேவைப்பட்ட நிலையில், பாடகி சின்மயி தண்ணீரும், பிஸ்கட்டும் வழங்கினார்.
தற்போது இப்போராட்டம் முடிவுக்கு வராமல் தொடரும் நிலையில் இதுகுறித்துப் பேசியிருக்கும் சின்மயி, “கடும் வெயில்ல போராடுறாங்க, அதனாலதான் என்னால முடிஞ்ச உதவியாக அவங்களுக்குத் தண்ணீரும், பிஸ்கட்டும் கொடுத்தேன். பணி நிரந்தரம் வேண்டும்னுதான கேட்குறாங்க, அதைக் கொடுப்பதில் என்ன பிரச்னை அரசுக்கு.

குறைந்தபட்சம் போராடுபவர்களுக்கு ஆதரவாகக் குரலாவது கொடுக்கலாம்
போராடுறதுல நிறையபேர் கணவன் துணையில்லாமல் தனியாக குடும்பத்தை நடத்தும் பெண்கள். பணி நிரந்தரம் செய்யப்பட்டால் அவர்கள் வாழ்வு கொஞ்சம் நிலையாக இருக்கும்.
களத்தில் நிற்க முடியவில்லை என்றாலும், வெளியில் இருந்து அவர்களுக்காகக் குரல் கொடுத்தாவது ஆதரவு கொடுக்கலாம். அவர்களின் கோரிக்கைகள் நியயமானது. அரசு அதை நிறைவேற்றணும்” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs