Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) மினி ஏலத்திற்கு முழு மூச்சில் தயாராகி வருகிறது. ஆயுஷ் மாத்ரே, உர்வில் பட்டேல், டிவால்ட் பிரேவிஸ் என கடந்த மெகா ஏலத்தில் Unsold ஆக போன வீரர்களை எல்லாம் தொடர் நடக்கும்போதே காயமடைந்த வீரர்களுக்கான மாற்று வீரர்களாக உள்ளே கொண்டு வந்து மினி ஏலத்திற்கு போகும் முன்னரே அணியை பலப்படுத்திவிட்டது.
Chennai Super Kings: சிஎஸ்கேவில் இருக்கும் ஓட்டைகள்
இன்னும் ஓரிரு இடங்கள் மட்டுமே சரியான வீரர்கள் இன்றி இருக்கிறது. ஒரு குறிப்பாக ஒரு ஓப்பனிங் பேட்டர், ஒரு ஆல்-ரவுண்டர் மற்றும் ஃபினிஷிங் வீரர் ஆகியருக்கு தேவை சிஎஸ்கேவில் பலமாக உள்ளது. டெவான் கான்வே அல்லது ரச்சின் ரவீந்திராவில் ஒருவரை விடுவிக்க வேண்டும். அடுத்து, சாம் கரன் அல்லது ஜேமி ஓவர்டன் ஆகியோரில் ஒருவரை விடுவிக்க வேண்டும். இவர்களின் இடத்தில் இன்னும் பலமான வீரர்களை கொண்டு நிரப்பியாக வேண்டும்.
Chennai Super Kings: சிஎஸ்கே கழட்டிவிடும் வீரர்கள்
கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நீடிப்பார் என சொல்லப்படும் வேளையில், எம்எஸ் தோனி (MS Dhoni) விளையாடுவாரா இல்லையா என்ற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளது. தூபே, ஜடேஜா, பதிரானா போன்ற தக்கவைக்கப்பட்ட வீரர்களுக்கும் மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர் உள்ளிட்ட வீரர்களை விடுவித்து இளம் வீரர்கள் அணிக்குள் கொண்டுவர சிஎஸ்கே திட்டமிடுவதாக கூறப்பட்டது.
Ravichandran Ashwin: தானாக வெளியேறும் அஸ்வின்…?
அந்த வகையில், ரவிசந்திரன் அஸ்வின் சிஎஸ்கே நிர்வாகத்திடம் தன்னை விடுவித்துவிடும்படி தெரிவித்ததாக சில நாள்களுக்கு முன் தகவல்கள் பரவின. அதாவது, ஐபிஎல் டிரேடிங் (IPL Trading) அல்லது மினி ஏலத்திற்கு (IPL 2026 Mini Auction) தன்னை விடுவிக்கும்படி அவர் கூறியிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.
Ravichandran Ashwin: சிஎஸ்கேவிடம் அஸ்வின் கேள்வி
இந்நிலையில், அடுத்த 2026ஆம் ஆண்டு சீசனில் (IPL 2026) தன்னை எப்படி பயன்படுத்திக்கொள்ள சிஎஸ்கே திட்டமிட்டிருப்பதாக சிஎஸ்கே நிர்வாகத்திடம் தீவிரமான கேள்வியை எழுப்பி உள்ளார். மேலும் அணியின் வியூகத்திற்கும், திட்டத்திற்கும் தான் பயனளிக்கவில்லை என்றால் தன்னை விடுவித்துவிடுங்கள் என ரவிசந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) சிஎஸ்கே நிர்வாகத்திடம் சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த சீசனில் சிஎஸ்கே விளையாடிய 14 போட்டிகளில் 9இல் அஸ்வின் விளையாடியிருந்தார். 2009இல் அவர் விளையாடிய முதல் சீசனுக்கு பிறகு முதல்முறையாக 12 போட்டிகளுக்கும் குறைவான போட்டியில் விளையாடியிருக்கிறார். மேலும் இந்த முறைதான் வழக்கத்தை விட அதிக எகானமியில் ரன்களையும் வாரி வழங்கியிருக்கிறார்.
இவரை சிஎஸ்கே மெகா ஏலத்தில் ரூ.9.75 கோடி கொடுத்து எடுத்தது. ஆனால் அடுத்த சீசன் மினி ஏலத்திற்கு இவரை விடுவித்தால் பர்ஸ் தொகை அதிகமாகும். இதனால் அணியில் இருக்கும் ஓட்டையான இடங்களை அடைக்க முடியும். இல்லையெனில் ராஜஸ்தான் அணியுடன் இவரை சஞ்சு சாம்சனுக்கு (Sanju Samson) பதிலாக டிரேட் செய்யலாம். எனவே அஸ்வின் விடுவிப்பதே சிஎஸ்கேவுக்கு நல்லது.
மேலும் படிக்க | இந்த 4 சீனியர் வீரர்களை கழட்டிவிடும் சிஎஸ்கே! மொத்தமாக மாறும் அணி!
மேலும் படிக்க | அஸ்வினை தொடர்ந்து இவருமா? CSK எடுத்திருக்கும் அதிரடி முடிவு.. திடுக்கிடும் தகவல்!
மேலும் படிக்க | அஸ்வின் வெளியேறுவதால்… CSK-க்கு கிடைக்கும் 3 நன்மைகள் – என்னென்ன?