சின்சினாட்டி,
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரைபகினா (கஜகஸ்தான்) – எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்) மோதினர்.
இதில் முதல் செட்டை எலிஸ் மெர்டென்ஸ் கைப்பற்றிய நிலையில், 2 மற்றும் 3-வது செட்டை ரைபகினா கைப்பற்றினார். ரைபகினா இந்த ஆட்டத்தில் 4-6, 6-3 மற்றும் 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இவர் 4-வது சுற்றில் மேடிசன் கீஸ் உடன் மோத உள்ளார்.
Related Tags :