IPL 2026: மினி ஏலத்தில் இந்த 2 வீரர்களுக்கு கோடிகள் கொட்டும் – அஸ்வின் கணிப்பு

IPL 2026 Mini Auction Latest News Updates: ஐபிஎல் 2025 தொடர நிறைவடைந்த உடனேயே ஐபிஎல் 2026 மினி ஏலம் குறித்த பேச்சுகள் கிளம்பத் தொடங்கிவிட்டன. 

எந்தெந்த வீரர்கள் டிரேட் செய்ய வாய்ப்புள்ளது, எந்தெந்த வீரர்களை அணிகள் மினி ஏலத்திற்கு விடுவிக்கப்போகிறார்கள், அடுத்த ஏலத்தில் எந்தெந்த புதிய வீரர்கள் அணிகள் குறிவைக்கும் என சமூக வலைதளங்கள் மூலம் கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் இவற்றை அலசி ஆராய்ந்து வருகின்றனர் எனலாம். வரும் டிசம்பர் மாதத்திற்கு மினி ஏலம் நடைபெறும் என கூறப்படும் நிலையில், அதுவரை ஐபிஎல் குறித்த பேச்சுகளுக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது என்பது மட்டும் உறுதி.

IPL 2026 Mini Auction: சஞ்சு சாம்சன், அஸ்வின் டிரேட்

கடந்த சில மாதங்களாகவே சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டிரேட் செய்ய இருப்பதாகவும், சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் கடுமையாக போட்டிப் போடுவதாக கூறப்பட்டது. அதாவது, சிஎஸ்கே, ஆர்ஆர் கேகேஆர் ஆகிய அணிகள்தான் கடைசி மூன்று இடங்களை பிடித்த அணிகள் எனலாம். 

இவை கண்டிப்பாக பல வீரர்களை கழட்டிவிட்டு, பல வீரர்களை சேர்த்துக்கொண்டு பலமான ஸ்குவாடை அமைக்க இப்போது இருந்தே திட்டம் திட்டி வரும் எனலாம். அந்த வகையில், அஸ்வினும் தன்னை வேண்டுமென்றால் விடுவித்துக்கொள்ளும்படி சிஎஸ்கேவிடம் சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அது உறுதியாகவில்லை.

IPL 2026 Mini Auction: மினி ஏலம் குறித்து அஸ்வின் 

அஸ்வின் குறித்த பேச்சுகளே பரபரப்பாக போய்கொண்டிருந்தாலும், அவரோ கூலாக யூ-ட்யூப்பில் உட்கார்ந்துகொண்டு தமிழ், இந்தி என வெளுத்து வாங்கி வருகிறார். தொடர்ந்து அதில் இயங்கி வருகிறார். அப்படியிருக்க, Ash Ki Baat என்ற அவரின் இந்தி யூ-ட்யூப் சேனலில் அவர் சமீபத்தில் பேசியபோது, ஐபிஎல் மினி ஏலத்தில் எந்த வீரர் அதிக தொகைக்கு எடுக்கப்படுவார் என்பது குறித்து பேசியிருந்தார். 

மினி ஏலம் குறித்த அவர் பேசியதாவது, “மினி ஏலத்தில் நீங்கள் இந்திய வீரர்களை பார்ப்பது என்பது மிக அரிது. புதிய வீரர்கள்தான் வருவார்கள். எனவே, வெளிநாட்டு வீரர்கள்தான் அதிக மதிப்பில் ஏலம் போவார்கள்” என்றார். அதே நேரத்தில், “அணிகள் பெரிய இந்திய வீரர்களை ஏலத்திற்கு விட்டால் பெரிய ரிஸ்காகிவிடும். எனவே, நிறையே ஆஸ்திரேலிய வீரர்கள் ஏலத்திற்கு வருவார்கள்” என்றார்.

IPL 2026 Mini Auction: மினி ஏலத்தில் அதிக தொகை யாருக்கு?

அவர் தொடர்ந்து, “பஞ்சாப் கிங்ஸ் அணியில் மூன்று போட்டிகளை விளையாடிய மிடசெல் ஓவன் மினி ஏலத்திற்கு வருவார். கேம்ரூன் கிரீன் ஏளத்திற்கு வருவார். இந்த வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்கள்தான் அதிக விலைக்கு ஏலம் போவார்கள்” என கூறிய அவர் அனைத்து அணிகளிடமும் சேர்த்து ஒரு ரூ.25 கோடி – ரூ.30 கோடி வரை இருக்கலாம் என்றும் தனது கணிப்பை தெரிவித்தார்.

IPL 2026 Mini Auction: மினி ஏலத்தில் மயங்க் யாதவ்?

அதுமட்டுமின்றி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அவர்களின் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவை விடுவிக்க அதிக வாய்ப்பிருப்பதாக அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். அவரை கடந்த மெகா ஏலத்தில் சுமார் ரூ.11 கோடிக்கு லக்னோ தக்கவைத்தது. ஆனால் அவர் அதிகம் காயத்தில் சிக்குவதால் பல போட்டிகளை தவறவிட வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே, மினி ஏலத்திற்கு இவர் விடுவிக்கப்பட்டால் நிச்சயம் இந்திய வீரர்கள் பட்டியலில் இவருக்கு அதிகம் கவனிக்கப்படுவார் எனலாம். 

மேலும் படிக்க | தீராத முழங்கால் பிரச்சனை.. 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா?

மேலும் படிக்க | இந்த 4 சீனியர் வீரர்களை கழட்டிவிடும் சிஎஸ்கே! மொத்தமாக மாறும் அணி!

மேலும் படிக்க | சஞ்சு சாம்சன் வேண்டுமா? இந்த 2 வீரர்களை டிரேடு செய்யுங்கள் – ராஜஸ்தான் கோரிக்கை!

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.