டிவிஎஸ் என்டார்க் 150 செப்டம்பர் 1ல் அறிமுகம்

டிவிஎஸ் மோட்டாரின் பிரசத்தி பெற்ற என்டார்க் 125 தொடர்ந்து பிரீமியம் வசதிகளுடன் கூடுதல் பவர் வெளிப்படுத்தும் 150cc அல்லது 160cc பெற்ற என்டார்க் 150 விற்பனைக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சந்தையில் உள்ள ஏப்ரிலியா SR 175, ஹீரோ ஜூம் 160, மற்றும் பிரசத்தி பெற்ற யமஹா ஏரோக்ஸ் 155 ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் என்டார்க் 150 வரக்கூடும், அனேகமாக புதிய மாடலின் தோற்ற உந்துதல் என்டார்க் 125 மாடலில் இருந்து பெற்றாலும் பல்வேறு ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் டிஎஃப்டி கிளஸ்ட்டரை கொண்டிருக்கலாம்.

125சிசி ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டர் சந்தையில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள என்டார்க்125 ஆனது அதன் ஸ்போர்ட்டிவ் தன்மையை வெளிப்படுத்துவதுடன் மேம்பட்ட வசதிகளுடன் வரக்கூடும் என்பதனால்  ‘Feel the Thrill Like Never Before’ என்ற டீசரை வெளியிட்டுள்ளது.

என்டார்க் 150 விலை அனேகமாக ரூ.1.50 லட்சத்தில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.