வாஷிங்டன்,
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் சிந்து நதி குறுக்கே இந்தியா அணை கட்டினால் ஏவுகணைகளை வீசி அழிப்போம் என்று மிரட்டல் விடுத்தார்.
இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூசிடம், பாகிஸ்தான் ராணுவ தளபதியின் அமெரிக்க பயணம் மற்றும் இந்தியாவுக்கு அவர் விடுத்த மிரட்டல் ஆகியவை பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த டாமி புரூஸ். இந்தியா-பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவு மாறாமல் உள்ளது. “பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடன் எங்களுக்கு ஒரு அனுபவம் இருந்தது. இரு ‘நாடுகள் இடையேயான மோதல் பயங்கரமாக வளர்ந்திருக்கலாம். இதை தடுக்க அமெரிக்க முயற்சிகளை மேற்கொண்டது என்றார்.