அமெரிக்காவுடன் பதற்றம் நிலவும் சூழலில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகஸ்ட் 21-ம் தேதி ரஷ்யா பயணம்

புதுடெல்லி: ஆகஸ்ட் 21-ம் தேதி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் ரஷ்யா செல்கிறார்.

இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்​நிலை​யில் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் ரஷ்​யா​வுக்கு சென்​றிருந்​தார். அங்கு அதிபர் புதினை சந்​தித்​துப் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இந்த சந்​திப்​புக்​குப் பிறகு அஜித் தோவல் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “ரஷ்ய அதிபர் புதின் இந்​தி​யா​வுக்கு வர விருப்​பம் தெரி​வித்​துள்​ளார். இது மகிழ்ச்சி அளிப்​ப​தாக உள்​ளது’’ என்றார்.

இந்​நிலை​யில், வரும் 21-ம் தேதி மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் ரஷ்​யா​வுக்கு செல்ல திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. அங்கு அந்​நாட்டு வெளி​யுறவு அமைச்​சர் செர்கே லாவ்​ரோவை சந்​தித்​துப் பேச உள்​ள​தாக கூறப்​படு​கிறது. இருதரப்பு உறவை மேலும் பலப்​படுத்​து​வது குறித்து இரு தலை​வர்​களும் பேச்​சு​வார்த்தை நடத்​து​வார்​கள்​ எனத்​ தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.