Dewald Brevis: நடந்த முடிந்த 2025 ஐபிஎல் தொடரின் பாதியில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேபி ஏபிடி என அழைப்படும் டெவால்ட் பிரெவிஸை வாங்கியது. சிஎஸ்கே அணியின் பந்து வீச்சாளர் சூர்ஜப்னீத் சிங்கிற்கு காயம் ஏற்பட்டதன் காரணத்தால், அவருக்கு மாற்று வீரராக சிஎஸ்கே அணி பிரெவிஸை தேர்வு செய்தது. 6 போட்டிகளில் விளையாடிய இவர் 225 ரன்களை குவித்தார். இவரது பங்களிப்பு சென்னை அணிக்கு ஓரளவு உதவியது என்றே கூறலாம்.
இரண்டு, மூன்று அணிகள் போட்டி
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை எந்த மாதிரியான சூழ்நிலையில், தேர்வு செய்தது என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசி இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவருடன் பேசியது போல இரண்டு, மூன்று அணிகள் அவருடன் பேசி இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். ஆனால் மற்ற அணிகள் டிவால்ட் பிரெவிஸுக்கு கூடுதல் பணம் கொடுக்க முன்வரவில்லை.
தொடரின் பாதியில் ஒரு வீரரை நாம் வாங்க வேண்டும் என்றால், முதலில் அந்த வீரரின் ஏஜெண்ட் உடன் பேச வேண்டும். அப்படி அந்த வீரரின் ஏஜெண்ட் உடன் பேசும்போது, கூடுதல் பணம் கேட்பார்.அப்படி அந்த கூடுதல் பணத்தை கொடுத்துதான் பிரெவிஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. அவர்தான் அடுத்த டிவில்லியர்சா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அவருக்கு நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் சிறப்பாக அமைந்தது என அவர் கூறினார்.
டெவால்ட் பிரெவிஸ் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கிறார். அவர் 2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். 2024 ஐபிஎல் தொடருக்கு பின்னர் நடந்த மெகா ஏலத்தின்போது மும்பை இந்தியன்ஸ் அணி அவரை கழட்டிவிட்டது. இதையடுத்து மெகா ஏலத்தில் டெவால்ட் பிரெவிஸை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் தொடரின் பாதியில் அவரை 2 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய வீரராக இருப்பார்
வரும் ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை தீட்டி வருகிறது. சில வீரர்களை மினி ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது. 2026 ஐபிஎல்லில் சென்னை அணிக்கு டெவால்ட் பிரெவிஸ் ஒரு முக்கிய வீரராக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் 4வது இடத்தில் களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது.
About the Author
R Balaji