Asia Cup 2025, Pakistan National Cricket Team: ஆசிய கோப்பை 2025 தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மற்றும் துபாயில் நடைபெறும் இந்த ஆசிய கோப்பை தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன, டி20 வடிவில் தொடர் நடைபெற உள்ளது.
India vs Pakistan: இந்தியா – பாகிஸ்தான் 3 முறை மோத வாய்ப்பு!
ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய அணிகளும்; பி பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங் ஆகிய அணிகளும் மோதுகின்றன. முதல் சுற்றில் ஒரு அணி தங்களின் பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் தலா 1 முறை மோதும். முதல் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும்.
சூப்பர் 4 சுற்றில் ஒரு அணி மற்ற 3 அணிகளுடன் தலா 1 முறை மோதும். சூப்பர் 4 சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். இறுதிப்போட்டி வரும் செப். 28ஆம் தேதி துபாயில் நடைபெறும். அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி செப். 14ஆம் தேதி துபாயில் நடைபெற இருக்கிறது. மேலும், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றால், அந்த சுற்றில் மீண்டும் ஒருமுறை மோத வாய்ப்புள்ளது. அதில் இந்த இரண்டு அணிகள் முதலிடம் பிடித்தால் இறுதிப்போட்டியிலும் மோத வாய்ப்புள்ளது. எனவே, மூன்று முறை இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்பிருக்கிறது.
Asia Cup 2025: பாகிஸ்தான் அணி அறிவிப்பு
இந்திய அணியின் ஸ்குவாட் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி பிசிசிஐயால் அறிவிக்கப்பட இருக்கிறது. அதையொட்டி, மும்பையில் இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். இது ஒருபுறம் இருக்க, ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் ஸ்குவாட் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்குவாடில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படாதது பாகிஸ்தான் ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையே உலுக்கி உள்ளது.
Asia Cup 2025: பாபர், ரிஸ்வான் நீக்கம் ஏன்?
பாபர் அசாம் கடைசியாக 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடியிருந்தார். அதில் பாபர் அசாம் 4 இன்னிங்ஸ்களில் 193 ரன்களை அடித்திருந்தார். சமீபத்தில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஓடிஐ தொடரில் மூன்று போட்டிகளிலும் முறையே 47, 0, 9 என்ற ரன்களையே அவர் அடித்திருந்து ஏமாற்றமளித்திருந்தார். ரிஸ்வானும் கூட தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். இதனாலேயே அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடருக்கு முன்…
சல்மான் அலி ஆகாஹ் தலைமையிலான 17 பேர் கொண்ட பாகிஸ்தான் ஸ்குவாட் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்குவாட் ஆசிய கோப்பையில் மட்டுமின்றி அதற்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தான் விளையாடுகிறது. இத்தொடரில் பாகிஸ்தான் உடன் ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன. இந்த தொடர் ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்குகிறது.
Team Pakistan Squad: பாகிஸ்தான் ஸ்குவாட்
சல்மான் அலி ஆகா (c), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வசீம் ஜூனியர், சாஹிப்சாதா ஃபர்ஹான், சலீம் அய்யா, சலீம் சுஃப்யான் மொகிம்.
About the Author
Sudharsan G