டொனால்டு டிரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி – உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

வாஷிங்டன்,

உக்ரைன், ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 271வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பேரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 15ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை, ரஷிய அதிபர் புதின் சந்தித்தார்.

அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த இந்த சந்திப்பின்போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். ஆனாலும், போர் நிறுத்தம் தொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. புதினை சந்தித்தப்பின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் டொனால்டு டிரம்ப் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல், டிரம்ப்பை சந்தித்தப்பின் இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்களுடன் ரஷிய அதிபர் புதின் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று சந்திக்கிறார். அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் இன்று இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

இந்த சந்திப்பின்போது உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, போரை நிறுத்துவது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் கருத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பின்போது ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப்பை சந்திக்க இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில் வாஷிங்டன்னில் செய்தியாளர்களை சந்தித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் மீதான ரஷியாவின் போரை நிறுத்தி அமைதியை கொண்டுவரும் வலிமை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இடம் உள்ளது’ என்றார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.