சென்னை: திமுக பொருளாளர், மக்களவை குழுத்தலைவர் டி. ஆர். பாலு அவர்களின் மனைவியும், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர்டி. ஆர். பி. ராஜா அவர்களின் தாயாருமான ரேணுகா தேவி (79) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். ரேணுகா தேவி நுரையீரல் பாதிப்பு காரணமாக, உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திமுக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட திமுக […]
