வாஷிங்டன்,
ரஷியாவிடம் இருந்து மலிவு விலையில் இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷியாவிடம் வர்த்தகம் செய்து அந்த நாட்டை வளமாக்குவதாக விமர்சித்தார். மேலும் ரஷியா மீது கச்சா எண்ணெய் செய்வதால் இந்தியாவுக்கு 50 சதவீதம் வரியையும் விதித்துள்ளார்.
அதேவேளையில் ரஷியாவிடம் இருந்து சீனா கச்சா எண்ணெய் வாங்கினாலும் அந்த நாட்டிற்கு எதிராக இதுவரை கூடுதலாக வரி விதிக்கவில்லை. இது குறித்து அமெரிக்கா கூறும் போது, ரஷியாவிடம் அதிக எண்ணெய் வாங்கும் சீனா மீதான எந்த ஒரு தடையும் உலகளாவிய எரிசக்தி விலைகளை உயர்த்தக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.
Related Tags :