இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியில் பல எதிர்பாராத விஷடங்கள் நடந்து வருகின்றன. தற்போது வெளியாகி உள்ள ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில், கூட துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே டி20 அணிக்கு துணை கேப்டனாக இருந்த அக்சர் படேலை அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு கில்லை நியமித்தனர். அவரை சூரியகுமார் யாதவிற்கு அடுத்ததாக டி20 அணிக்கு கேப்டனாக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் ரிசர்வ் வீரர்களின் பட்டியலில் கூட இல்லை.
விலகும் ரோகித் சர்மா
இது ஒருபக்கம் இருக்க, டி20 கிரிக்கெட்டை தாண்டி ஒருநாள் போட்டியிலும் சுப்மன் கில் தான் ரோகித் சர்மாவிற்கு பிறகு கேப்டனாக வருவார் என பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா அப்பதவில் இருந்து விலககுவதாகவும் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை நியமிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரும் ஒருநாள் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா, கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை வென்றதை அடுத்து அவர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதையடுத்து இந்த ஆண்டு மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதனால் அவர் இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் சூழல் ஏற்பட்டது. அவர் அடுத்த 2027ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரை விளையாட விருப்பமும் தெரிவித்துள்ளார்.
புதிய கேப்டன் இவர்தான்
இருப்பினும், அப்போது அவர் 40 வயதை எட்டி விடுவார் என்பதனால், அவர் இந்திய அணியில் இருப்பது சந்தேகமே. அணி நிர்வாகம் அவரை எடுப்பதில் தயக்கம் காட்ட கூடும் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கேப்டன் பதவில் இருந்து விலகி தொடக்க வீரராக மட்டும் விளையட ரோகித் சர்மா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி அவர் கேப்டன் பதவில் இருந்து விலகும் பட்சத்தில் அடுத்த கேப்டனாக சுப்மன் கில் வருவார் என கூறப்படுகிறது.
ஆனால், அவரை விட ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், ஸ்ரேயாஸ் ஐயரையே பிசிசிஐ தேர்வு செய்யும் எனவும் கூறப்பட்டு வருகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி உள்ளார். அவர் 70 போட்டிகளில் 2845 ரன்களை குவித்து 48.22 சராசரியை வைத்துள்ளார். இதில் 5 சதம் மற்றும் 22 அரைசதங்களும் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 128ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji