வடகிழக்கு மாநிலத்தின் முதல் திருநங்கை மருத்துவரின் சான்றிதழ்களில் பெயர், பாலினத்தை மாற்ற நீதிமன்றம் உத்தரவு

இம்பால்: மணிப்​பூர் மாநிலத்​தைச் சேர்ந்த திருநங்கை மருத்​து​வரின் கல்​விச் சான்​றிதழ்​கள் அனைத்​தி​லும், பெயர் மற்​றும் பாலினத்தை ஒரு மாதத்​துக்​குள் மாற்றி வழங்​கும்​படி சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களுக்கு உயர்​நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

மணிப்​பூரைச் சேர்ந்​தவர் பியான்சி லாய்​ஷ்​ராம். இவர் வடகிழக்கு மாநிலங்​களைச் சேர்ந்த முதல் திருநங்கை மருத்​து​வர். போபாய் லாய்​ஷ்​ராம் என்ற பெயரில் ஆணாக இருந்​தவர் கடந்த 2019-ம் ஆண்டு பாலின அறுவை சிகிச்சை மூலம் திருநங்​கை​யாகி மாறி அந்த சான்​றிதழ் மூலம் ஆதார் எண், வாக்​காளர் அடை​யாள அட்டை மற்​றும் பான் கார்​டு​களை பெற்​றார்.

ஆனால் இவரது பள்ளி கல்விச் சான்​றிதழ்​களில் எல்​லாம் இவரது பெயர் போபாய் லாய்​ஷ்​ராம் என்​றும், பாலினம் ஆண் என்​றும் உள்​ளது. அவை அனைத்​தி​லும் பெயர் மற்​றும் பாலினத்தை மாற்​றித்​தரும்​படி இவர் கடந்​தாண்டு உயர்​நீ​தி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். இந்த வழக்கு மணிப்​பூர் உயர்​நீ​தி​மன்​றத்​தில் விசா​ரணைக்கு வந்​தது.

பியான்சி லாய்​ஷ்​ராம்

திருநங்​கைகள் பாது​காப்பு உரிமை சட்ட விதி​முறை​கள் படி, கல்​விச் சான்​றிதழ்​கள் அனைத்​தி​லும் பெயர் மற்​றும் பாலினம் மாற்​றம் செய்ய பியான்​சிக்கு உரிமை உள்​ளது என அவரது வழக்​கறிஞர் ஜெய்னா கொத்​தாரி வாதிட்​டார்.

இதனை ஏற்றுக்கொண்ட மணிப்​பூர் உயர் ​நீ​தி​மன்​றம் திருநங்​கை​யாக மாறிய​வரின் பிறப்​புச் சான்​றிதழ் உட்பட அனைத்து சான்​றிதழ்​களி​லும் பெயர் மற்​றும் பாலின மாற்​றம் செய்ய வேண்​டும் என உத்​தர​விட்​டது.

இதுகுறித்து பியான்சி கூறுகை​யில், ‘‘நான் படிக்​கும் காலத்​தில் எனது சான்​றிதழ்​களில் எனது பாலினம் ஆண் என இருந்​த​தால், ஆண்​கள் விடு​தி​யில் தங்​கினேன். அப்​போதெல்​லாம் எனக்கு அச்​ச​மாக இருக்​கும். தற்​போது நான் அடை​யாள குழப்​பம் இல்​லாம் எனது பணியை தொடர முடி​யும் என்​ப​தால் இந்த தீர்ப்பு எனக்கு நிம்​ம​தியை அளித்​துள்​ளது. ​நான்​ அறுவை சிகிச்​சை அல்​லது மகப்​பேறு மருத்​து​வத்​தில்​ நிபுண​ராக திட்​ட​மிட்​டுள்​ளேன்​’’ என்​றார்​.பியான்சி லாய்​ஷ்​ராம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.