நடிகை ஸ்ருதி ஹாசன் ‘தி ஹாலிவுட் ரிப்போர்டர்’ இந்தியப் பதிப்பக்கத்திற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.
அதில் வாழ்க்கை, சினிமா, ட்ரோல், தந்தை கமல்ஹாசன் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில் ‘தக் லைஃப்’ படத்தின் தோல்வி கமல்ஹாசனைப் பாதித்ததா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், “சினிமாவில் வெற்றி தோல்வி என பல விஷயங்களை பார்த்தவர் எனது தந்தை கமல் ஹாசன்.
அதனால் ‘தக் லைஃப்’ படத்தினுடைய ரிசல்ட் அவரை பாதிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் அவர் சினிமாவில் சம்பாதிக்கும் எல்லாத்தையும் சினிமாவில் தான் போடுகிறார்.
கார் வாங்குவது, வீடு கட்டுவதற்கு அவர் ஆசைப்படுவது இல்லை. இதுபோன்ற நம்பர் கேம் எனது தந்தையை ஒருபோதும் பாதிக்காது” என்று ஸ்ருதி ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…