Asia Cup 2025: ஆசிய கோப்பை 2025 தொடர் வரும் செப். 9ஆம் தேதி தொடங்க உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபியில் டி20ஐ வடிவில் தொடர் நடைபெற உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய அணிகள் ஏ பிரிவிலும்; இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ள. குரூப் சுற்றில் ஒவ்வொரு அணிகளும் மற்ற 3 அணிகளுடன் தலா 1 போட்டியில் விளையாடும்.
Asia Cup 2025: இந்தியா, பாகிஸ்தானால் பரபரப்பு
இதன்முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும். இதிலும் ஒரு அணி மற்ற 3 அணிளுடன் தலா 1 முறை மோதும். சூப்பர் 4 சுற்றின் முடிவில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குச் செல்லும்.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இந்த தொடரில் மூன்று முறை கூட மோத வாய்ப்பிருக்கிறது. குரூப் சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் செப். 14ஆம் தேதி துபாயில் மோதுகின்றன. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தங்களின் ஸ்குவாடை அறிவித்துவிட்டன. அந்த வகையில், இந்திய அணியின் ஸ்குவாட் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது.
Asia Cup 2025: யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?
சுப்மான் கில்லை மீண்டும் டி20ஐ அணிக்கு எடுத்துவந்து துணை கேப்டன் பொறுப்பு வழங்கியது; ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு வாய்ப்பளிக்காதது; பிரசித் கிருஷ்ணாவுக்கு பதில் ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு கொடுத்தது என பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், சுப்மான் கில் வருகையால் சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பதும் குறைவு. ஜித்தேஷ் சர்மா அணியில் இடம்பிடிப்பதால் ரின்கு சிங்கிற்கும் விளையாடும் வாய்ப்பு கிடைப்பது குறைப்பு.
Asia Cup 2025: ரின்கு சிங்கின் மிரட்டல் சதம்
இந்நிலையில், உத்தரபிரதேச டி20 லீக்கில் ரின்கு சிங் தற்போது சிறப்பான சம்பவத்தை செய்திருக்கிறார். வெறும் மீரட் மேவரிக்ஸ் அணி சார்பாக விளையாடிய ரின்கு சிங் 48 பந்துகளில் 108 ரன்களை அடித்து மிரட்டினார். இதில் 8 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரி அடக்கம். இதன்மூலம், நேற்று (ஆகஸ்ட் 21) நடந்த கோரக்பூர் லயன்ஸ் அணிக்கு எதிரான அந்த போட்டியில் ரின்கு சிங் விளையாடிய மீரட் மேவரிக்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. அணியின் பினிஷிங் வேலையை ரின்கு சிங் கச்சிதமாக நிறைவேற்றினார்.
Asia Cup 2025: பிளேயிங் லெவனில் ரின்கு சிங்
அந்த வகையில், ரின்கு சிங் ஆசிய கோப்பை பிளேயிங் லெவனில் விளையாடப்போவது ஏறத்தாழ உறுதியாகி இருக்கிறது எனலாம். குறிப்பாக, இந்திய அணியில் நம்பர் 8 வீரர்கள் பேட்டிங் தேவைப்படும். அப்படியிருக்க, சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இல்லாதபட்சத்தில் ரின்கு சிங்கை விளையாட வைக்கலாம். அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்டியா, அபிஷேக் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் என ஆறு பந்துவீச்சு ஆப்ஷன் இருப்பதால் ரின்கு சிங்கை நம்பர் 7இல் இறக்கலாம்.
Team India: இந்திய அணி பிளேயிங் லெவன் கணிப்பு
சுப்மான் கில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ரின்கு சிங், ஜித்தேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.