சென்னை: கிராமங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கு மேல் விடுப்பு எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் பணியாற்றி வரும் தூய்மை காவலர்களுக்கு (தூய்மை பணியாளர்கள்) சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. வார விடுமுறை வழங்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு ஊரக […]
