இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 750 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக கைபர் பக்துங்க்வா மாகாணம் வெள்ளப்பெருக்கால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
எனவே அங்கு மீட்பு பணியை துரிதப்படுத்துமாறு முதல்-மந்திரி அமின் அலி கந்தாபூர் உத்தரவிட்டார். அதன்பேரில் அங்கு சேத மதிப்பு குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இதில் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் மட்டும் சுமார் ரூ.600 கோடி அளவுக்கு உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
Related Tags :