ஆந்திரா, தெலங்கானாவில் மின் கம்பங்களில் உள்ள கேபிள் ஒயர்களை அகற்றும் பணி தீவிரம்

ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்​கா​னா​வில் மின் கம்​பங்​களில் உள்ள கேபிள் ஒயர்கள் அகற்​றப்​படு​கின்றன. தெலங்​கானா மாநிலம், ராமாந்​த​பூர் பகு​தி​யில் கிருஷ்ண ஜெயந்​தியை முன்​னிட்டு அன்​றிரவு தேர்​திரு​விழா நடை​பெற்​றது.

அப்​போது மின்​சார கம்​பங்​களில் சுற்றி இருந்த கேபிள், இன்​டர்​நெட் ஒயர்​கள் தேர் மீது உரசி​ய​தில், அதிலிருந்து மின்​சா​ரம் பாய்ந்து 6 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். உரிய பாது​காப்பு ஏற்​பாடு​கள் இன்றி கேபிள் ஆபரேட்​டர்​கள், இன்​டெர்​நெட் நிறு​வனத்​தினர் அரசின் மின் கம்​பங்​களை பயன்​படுத்​தி​ய​தால் மின்​சா​ரம் பாய்ந்து 6 பேர் உயி​ரிழந்​தனர் என விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

இதைத்​தொடர்ந்து அனு​ம​தி​யின்றி மின் கம்​பங்​களில் கட்​டப்​பட்​டுள்ள கேபிள் ஒயர்​களை நீக்​கு​மாறு தெலங்​கானா அரசுக்கு ஹைத​ரா​பாத் உயர் நீதி​மன்​றம் நேற்று உத்​தர​விட்​டது. இதற்கு இடைக்​கால தடை விதிக்க வேண்​டும் என்ற பார்தி ஏர்​டெல் நிறு​வனத்​தின் கோரிக்​கையை உயர் நீதி​மன்​றம் நிராகரித்து விட்​டது.

இந்த உத்​தரவை தொடர்ந்து ஹைத​ரா​பாத் மட்​டுமின்றி தெலங்​கானா முழு​வதும் அனு​மதி இன்றி கட்​டப்​பட்​டுள்ள கேபிள் ஒயர்களை மின்​வாரிய ஊழியர்​கள் நேற்று முதல் அகற்றி வரு​கின்​றனர். ஆந்​தி​ரா​விலும் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக திருப்பதி உள்​ளிட்ட பல நகரங்​களில் மின் கம்​பங்​களில் கட்​டப்​பட்​டுள்ள கேபிள், இன்​டர்​நெட் ஒயர்​களை மின்​வாரிய ஊழியர்​கள் அகற்​றி வரு​கின்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.