காக்கா வலிப்பு என்ற சொல்லுக்கு மாற்றுச்சொல்லை உருவாக்க வேண்டும்: முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி வேண்டுகோள்

சென்னை: காக்கா வலிப்பு என்ற சொல்​லுக்கு நாகரி​க​மான மாற்​றுச்​சொல்லை உரு​வாக்க வேண்​டும் என மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால​கிருஷ்ண காந்தி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். இந்​திய கால் – கை வலிப்பு சங்​கம் (எபிலிப்​சி) சார்பில் கால் – கை வலிப்பு பராமரிப்பு மற்​றும் ஆராய்ச்சி குறித்த ‘இகான் – 2025’ என்ற தலைப்​பில் தேசிய கருத்​தரங்​கம் சென்னை எம்​ஆர்சி நகரில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நேற்று நடந்​தது. 4 நாட்​கள் நடை​பெறும் இந்த கருத்​தரங்​கத்தை மேற்கு வங்க மாநில முன்​னாள் ஆளுநர் கோபால​கிருஷ்ண காந்தி நேற்று மாலை தொடங்கி வைத்து விழா மலரை வெளி​யிட்​டார்.

சங்​கத்​தின் தலை​வர் பி.சதீஷ் சந்​தி​ரா, பொதுச்​செய​லா​ளர் பிந்து மேனன், இந்​திய கால் – கை வலிப்பு சொசைட்டி தலை​வர் சரத் சந்​தி​ரா, பொதுச்​செய​லா​ளர் விநயன், இகான் 2025 அமைப்​பின் தலை​வர் நடராஜன், செய​லா​ளர் மால்​கம் ஜெய​ராஜ் உட்பட இந்தியா மற்​றும் வெளி​நாடு​களில் இருந்து முன்​னணி நரம்​பியல் நிபுணர்​கள், வலிப்பு நோய்​களின் ஆராய்ச்​சி​யாளர்​கள் மற்​றும் துறை சார்ந்த மருத்​துவ நிபுணர்​கள் கலந்து கொண்​டனர்.

கருத்​தரங்​கத்​தில் கால் – கை வலிப்பு கண்​டறிதல், சிகிச்சை மற்​றும் மேலாண்மை ஆகிய​வற்​றின் சமீபத்​திய முன்​னேற்​றங்​களை மருத்​து​வர்​கள் பகிர்ந்து கொண்​டனர். நிகழ்ச்​சி​யில் மேற்கு வங்க மாநில முன்​னாள் ஆளுநர் கோபால​கிருஷ்ண காந்தி பேசியதாவது: கடந்த 1958-ம் ஆண்டு ஏப்​ரல் 25-ம் தேதி மாநிலங்​களவை​யில் உறுப்​பினர் ஒரு​வர் பேசும்​போது, “ஒரு​வருக்கு மரண தண்​டனை விதிக்​கப்​பட்​டு, அவருக்கு மனநலம் சரி​யில்லை என கண்​டறியப்​பட்​டால், அவர் தூக்​கி​லிடப்​பட​மாட்​டார்” என்று பேசினார்.

அப்​போது மாநிலங்​களவை தலை​வ​ராக இருந்த சர்​வபள்ளி ராதாகிருஷ்ணன் குறுக்​கிட்​டு, “நல்ல மனநிலையே அசாதாரணமானது. மனநல பாதிப்​புக்கு பல நிலைகள் உள்​ளன. நாம் அனை​வரும் அதில் ஒரு வகை​யான பாதிப்​புக்கு உள்​ளானவர்​களே” என்​றார்.

வலிப்பு நோய் என்​பது கடுமை​யான​தாக பார்க்​கப்​பட்​டாலும், அது குணப்​படுத்த கூடிய ஒன்று தான். இது​தான் இந்த மாநாட்​டின் கருப்​பொருள் ஆகும். ஆனாலும் அதை​யும் தாண்டி அனை​வர் மனதி​லும் இருப்​பது மனநல பாதிப்​பு​களால், பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் எதிர்​கொள்​ளக்​கூடிய சவால்​களாகும்.

நாம் அனை​வரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்​டும். நாம் அனை​வரும் மனநல பாதிப்பின் காரணங்​கள், விளைவு​கள் பற்​றிய புரிதல் இல்​லாமல் இருக்​கிறோம். அவை கட்​டுப்​பாட்டை மீறி செல்​கின்​றன. இவற்றை மருந்​துகள் மூல​மாக மட்​டுமே குணப்​படுத்த முடி​யாது என்​பதை புரிந்து கொள்ள வேண்​டும்.

நமது மனநலம் சில சூழ்​நிலைகளில் பணி​வாக​வும், சில சூழ்​நிலைகளில் வலிப்​புத்​தாக்​கங்​களை போல திடீரென வியத்​தகு முறையிலும் இருக்​கலாம். நமக்கு இதி​காசங்​களை​யும் பல நூல்​களை​யும் வழங்​கிய நம்​முடைய மொழிகள், உடல் நல குறை​பாடுகளை போலன்​றி, மனநல குறை​பாடு​களுக்கு வெட்​கக்​கே​டான சொல்லை உரு​வாக்க தவற​வில்​லை. உளவியல் ரீதி​யாக பாதிக்​கப்​பட்​ட​வர்​களை அவமானப்​படுத்​து​வதற்கு முழு அகரா​தியே உள்​ளது.

இதுவே ஒரு மனநல பாதிப்பை கையாளுவதை​யும், சிகிச்சை அளிப்​ப​தை​யும் கடின​மாக்​கு​கிறது. தொழு நோயாளி என்ற சொல் இப்​போதும் நாகரீக​மாக கருதப்​பட​வில்​லை. தொழு நோயால் பாதிக்​கப்​பட்​ட​வர் என்று தான் அழைக்​கப்​படு​கிறார்​கள். அதே​போல் வலிப்பு நோயை, காக்கா வலிப்பு என அவமானகர​மான சொல்​லால் அழைக்​கிறார்​கள். இது​போன்ற சொற்​களுக்கு நாகரி​க​மான மாற்று சொற்​களை உரு​வாக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.