“சாப்பாட்டில் ஈ, பூச்சி, முடி இருக்கத்தான் செய்யும்'' -ஷாருக்கான் மனைவி நடத்தும் ஹோட்டலில் விளக்கம்

தூரி ரெஸ்டாரண்ட்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஐ.பி.எல் கிரிக்கெட் அணியை சொந்தமாக நடத்தி வருகிறார். இது தவிர ரெட்சில்லீஸ் என்ற படத்தயாரிப்பு கம்பெனியையும் நடத்தி வருகிறார்.

ஷாருக்கான் மனைவி கெளரி கான், தூரி என்ற பெயரில் சொந்தமாக ரெஸ்டாரண்ட் ஒன்றை மும்பையில் ஷாருக்கான் வசிக்கும் பாந்த்ரா பகுதியில் நடத்தி வருகிறார்.

இந்த உணவகம் ஆசியன் மற்றும் தென்னமெரிக்க நாட்டு உணவுகளுக்கு மிகவும் பிரபலம் ஆகும்.

அபிராஜ் கோலி, கெளரி கான்

சர்ச்சையான வீடியோ

சமீபத்தில் இந்த ரெஸ்டாரண்டில் போலி பனீர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக யூடியூப்பர் ஒருவர் குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டு இருந்தார். ஆனால் அதனை ரெஸ்டாரண்ட் நிர்வாகம் மறுத்து இருந்தது.

இந்த ரெஸ்டாரண்டை கெளரி கான், அபியராஜ் கோலி என்பவருடன் இணைந்து நடத்தி வருகிறார். சமீபத்தில் எழுந்த உணவு சர்ச்சை குறித்து அபிராஜ் கோலி Pop Diaries என்ற ஷோவில் கலந்து கொண்டு பேசுகையில் விரிவாக பேசினார்.

உணவு சுகாதாரம் குறித்து விளக்கம்

ரெஸ்டாரண்ட் பார்ட்னர் அபிராஜ் கோலி, Pop Diaries என்ற ஷோவில் இது தொடர்பாக கூறுகையில், ”சிறிய ஈக்கள், பூச்சிகள், சிறிய முடிகள் உணவில் வரக்கூடும். அது வேலை செய்யும்போது அல்லது பார்சல் கட்டும்போது வரக்கூடும்.

இது உங்கள் வீடுகளில் நடக்கும், இது உங்கள் பணியிடத்தில் நடக்கும், இது உணவகத்தில் நடக்கும், அதை எதுவும் மாற்ற முடியாது.

Gauri Khan's restaurant
Gauri Khan’s restaurant

அதிகமான உணவகங்களில் அவர்கள் செய்யும் செயல்களில் சுத்தம் இல்லை, ஆனால் எங்கள் ரெஸ்டாரண்ட் மிகவும் தரமானது. உணவு எவ்வாறு தாயரிக்கப்படுகிறது என்பதற்கு நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

சமையலறையின் சுகாதாரம் அல்லது அது எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பது மட்டுமல்லாமல் சப்ளையர்களிடமிருந்து உணவு தயாரிக்க தேவையான பொருள்கள் வந்ததிலிருந்து அது ஒருவரின் தட்டில் உணவாக சேரும் வரை அவை எவ்வாறு சேமிக்கப்படுகிறது என்பதிலும் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

Gauri Khan’s restaurant

எங்களிடம் சமைக்காத இறைச்சி, மீன்கள் வருகிறது. அவற்றை சூப்பர்ஃப்ரீசர் எனப்படும் ஒரு குறிப்பிட்ட உபகரணத்தில் வைத்து எடுத்து பயன்படுத்துகிறோம்.

சூப்பர்ஃப்ரீசர் உணவை -60 மற்றும் -70 டிகிரிக்குக் குறைக்கிறது, இது உணவில் எந்த பாக்டீரியாவும் வளர விடாது” என்று கூறினார்.

அபியராஜ் கோலியின் இந்த பேட்டி வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.