லண்டன்,
இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் (100 பந்துகள் கிரிக்கெட்) தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பர்மிங்காம் பீனிக்ஸ் – வெல்ஷ் பயர் அணிகள் மோதின.
இந்த மோதலில் முதலில் பேட்டிங் செய்த பர்மிங்காம் பீனிக்ஸ் அணி 100 பந்துகளில் 9 விக்கெட்டை இழந்து 138 ரன்கள் எடுத்தது. பர்மிங்காம் பீனிக்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தேல் 38 ரன் எடுத்தார். வெல்ஷ் பயர் தரப்பில் கிறிஸ் கீரின் 3 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 139 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெல்ஷ் பயர் அணி 89 பந்துகளில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 140 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெல்ஷ் பயர் தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 47 ரன் எடுத்தார்.