நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது கருணை காட்ட முடியாது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டம்

மதுரை: நீர்​நிலை ஆக்​கிரமிப்​பாளர்​கள் மீது கருணை காட்ட முடி​யாது. நீர்​நிலை ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்​றி, மக்​கள் நலனுக்​காக அவற்​றைப் பாது​காக்க வேண்​டும் என உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் தெரி​வித்​தனர். மதுரை உள்​ளிட்ட பல்​வேறு இடங்களில் நீர்​நிலைகளில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றக் கோரிய வழக்​கு, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நீதிப​தி​கள் எஸ்.எம்​.சுப்​பிரமணி​யம், ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி​கள், “நீர்​நிலைகளில் ஆக்​கிரமிப்​பு​களை அனு​ம​திக்​கக் கூடாது. இது தொடர்​பாக உச்ச நீதி​மன்​ற​மும், உயர் நீதி​மன்ற​மும் பல்​வேறு வழக்​கு​களில் உத்​தர​வு​களைப் பிறப்​பித்​துள்​ளன. அனைத்து ஆக்​கிரமிப்​பு​களை​யும் அகற்​றி, நீர்​நிலைகளை பாது​காக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

நீர்​நிலை ஆக்​கிரமிப்​பாளர்களுக்கு கருணை காட்ட முடி​யாது. அதே நேரத்​தில், நீர்​நிலைப் பகுதி ஆக்​கிரமிப்​பாளர்​கள், அந்த இடத்தில் பல ஆண்​டு​களாக வாழ்​வ​தாகத் தெரி​கிறது. அவர்​களின் வாழ்​வா​தா​ரத்​தை​யும் பாது​காக்க வேண்​டும். அவர்​களுக்கு மாற்று இடம் ஒதுக்​கி, அவர்​களுக்கு இலவச பட்டா வழங்க வேண்​டும்” என்றனர்.

கூடு​தல் அட்​வகேட் ஜெனரல் அஜ்மல்​கான் வாதிடும்​போது, “நீர்​நிலை ஆக்​கிரமிப்​பாளர்​களுக்கு மாற்று இடம் அடை​யாளம் காணப்பட்டு வரு​கிறது. அதில் தகு​தி​யானவர்​களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்​கப்​படும். இந்த நடை​முறை​களை முடிக்க 6 மாதங்​கள் தேவைப்​படு​கிறது” என்​றார்.

தொடர்ந்து நீதிப​தி​கள், “நீர்​நிலைகள் ஆக்​கிரமிப்​பாளர்​களுக்கு மாற்று இடம் வழங்​கப்​பட்ட பிறகு ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்​றி​விட்​டு, மக்​களின் நலனுக்​காக நீர்​நிலைகளை பாது​காக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று உத்​தர​விட்​டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.