நியூயார்க்,
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து கொண்ட அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஜானிக் சின்னர் (இத்தாலி) , செக் குடியரசுவை சேர்ந்த கோபிரிவாவை எதிர் கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னர் 6-1, 6-1 ,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் . இதனால் அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் 10-வது வரிசையில் உள்ள லாரென்சோ முசெட்டி (இத்தாலி) 6-7 (3-7), 6-3,6-4,6-4 என்ற செட் கணக்கில் பெரிகார்டை (பிரான்ஸ்) தோற்கடித்தார்.
Related Tags :