சென்னை,
இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்த்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் . கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அஸ்வின் விளையாடி இருந்தார் .இது தொடர்பாக அஸ்வின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள், ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது நேரம் இன்று முடிவடைகிறது, ஆனால் பல்வேறு லீக்குகளைச் சுற்றியுள்ள விளையாட்டை ஆராய்பவராக எனது நேரம் இன்று தொடங்குகிறது.
பல ஆண்டுகளாக அனைத்து அற்புதமான நினைவுகள் மற்றும் உறவுகளுக்கும், மிக முக்கியமாக ஐபிஎல் நிர்வாகம் மற்றும் பிசிசிஐக்கும் , இதுவரை எனக்குக் ஆதரவு அளித்த அனைத்து அணி உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு முன்னால் உள்ளதை அனுபவித்து, சிறப்பாகப் பயன்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். என தெரிவித்துள்ளார். அஸ்வினின் திடீர் ஓய்வு முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிற நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாட உள்ளதாக அஸ்வின் அறிவித்துள்ளார்.
இதுவரை அஸ்வின் ஐபிஎல் தொடரில் 221 போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். பேட்டிங்கில் 98 இன்னிங்சில் 833 ரன்கள் எடுத்துள்ளார்.