ஒட்டுமொத்த ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன் – அஸ்வின் திடீர் அறிவிப்பு!

கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடரின் போது அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் பாதியில் அவர் ஓய்வை அறிவித்தது பல்வேறு விதமான சர்ச்சைகளை எழுப்பியது. முதல் இரண்டு போட்டிகளில் பிளேயிங் லெவனில் இடம்பெறாத அஸ்வின் மூன்றாவது போட்டியின் நடுவில் ஓய்வைஅறிவித்து இருந்தார். அதன் பிறகு ஐபிஎல் மெகா ஏலத்தில் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார். அதன் பிறகு அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. 

அஸ்வின் ஏமாற்றம் 

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருந்தார் அஸ்வின். தோனி மற்றும் ஜடேஜா உடன் மீண்டும் இணைந்து விளையாடுவார் என்பதால் பலரும் இந்த கூட்டணிக்காக காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் சென்னை மைதானத்திலேயே அஸ்வினால் சிறப்பாக பந்து வீச முடியவில்லை. மேலும் ரன்களையும் வாரி வழங்க தொடங்கினார். இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் அவர் மீது மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். சில ரசிகர்கள் சென்னை அணியில் இருந்து வெளியேறு மாறும் அஸ்வினிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு அஸ்வின் சாமர்த்தியமாக பதில்களை அளித்திருந்தார். 

இந்நிலையில் சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வர உள்ளதாகவும், அதற்கு பதிலாக அஸ்வின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைய இருப்பதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் அஸ்வின் அதனை மறுத்திருந்தார். மேலும் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் டெவால் பிரவீஸ் பற்றி சில கருத்துக்களை பேசியதால் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் அஸ்வின். அப்போதே அஸ்வின் சென்னை அணியில் இருந்து இந்த ஆண்டு வெளியேறுவார் என்ற தகவல்கள் வெளியானது. 

ஓய்வு அறிவிப்பு 

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென்று ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஓய்வு குறித்து பதிவிட்டுள்ள அஸ்வின், “சிறப்பு நாள், அதனால் ஒரு சிறப்பு ஆரம்பம். ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள், ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது நேரம் இன்று முடிவடைகிறது, ஆனால் பல்வேறு லீக்குகளை சுற்றி விளையாட்டை ஆராய்பவராக எனது நேரம் இன்று தொடங்குகிறது. 

பல ஆண்டுகளாக அனைத்து அற்புதமான நினைவுகள் மற்றும் உறவுகளுக்கும், மிக முக்கியமாக ஐபிஎல்
மற்றும் பிசிசிஐ நன்றி. இதுவரை எனக்கு அனைத்தையும் வழங்கியவற்றிற்கு அணி உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு முன்னால் உள்ளதை அனுபவித்து, சிறப்பாக பயன்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அஸ்வின் மற்ற நாடுகளில் நடக்கும் கிரிக்கெட் லீக் தொடர்களில் விளையாட உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் சில கிளப்புகளுக்கு பயிற்சியாளராகவும் பணியாற்ற உள்ளார்.

Special day and hence a special beginning.

They say every ending will have a new start, my time as an IPL cricketer comes to a close today, but my time as an explorer of the game around various leagues begins today

Would like to thank all the franchisees for all the…

— Ashwin  (@ashwinravi99) August 27, 2025

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.