திருமலை: செப்டம்பர் 7-ந்தேதி முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. அன்றைய தினம் கிரகணம் சென்னையில் முழுமையாக தெரியும், பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை யொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை மூடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. செப்டம்பர் 7-ந்தேதி மாலை 3 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை சுமார் 12 மணி நேரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் என்பது, சூரியன், பூமி, […]
