How to Update Phone Number In DL & RC: உங்கள் ஓட்டுநர் உரிமம் அல்லது ஆர்.சி.யில் தவறான மொபைல் எண் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு இ-சலான் மற்றும் முக்கியமான அறிவிப்புகள் சரியான நேரத்தில் வரவில்லை என்றால், இனி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. வீட்டிலிருந்தே ஆன்லைனில் எளிதாக இதை சரிசெய்யலாம், அதுவும் அரசு அலுவலகங்களின் வரிசையில் மணிக்கணக்கில் நிற்காமல்.
Add Zee News as a Preferred Source
போக்குவரத்து அமைச்சகம் கூறுவது என்ன?
போக்குவரத்து அமைச்சகத்தின் கூற்றுப்படி, சுமார் 45% DL மற்றும் RC தவறான மொபைல் எண்களைப் பதிவு செய்துள்ளன. இதன் காரணமாக மக்கள் போக்குவரத்து சலானையும் முக்கியமான தகவல்களையும் சரியான நேரத்தில் பெற முடியாமல் போகிறது . எனவே, ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆர்.சி. தொடர்பான அறிவிப்புகளை சரியான நேரத்தில் பெறுவதற்கு சரியான தொலைபேசி எண்ணை வைத்திருப்பது மிகவும் முக்கியம் ஆகும்.
சரியான மொபைல் எண் ஏன் முக்கியம்?
உங்கள் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்.சி.யில் சரியான தொலைபேசி எண் இருந்தால், உங்களுக்கு இ-சலான் மற்றும் பிற தகவல்கள் சரியான நேரத்தில் கிடைக்கும். இது தவிர, காப்பீடு, அனுமதி மற்றும் வரி போன்ற வாகனம் தொடர்பான சேவைகள் பற்றிய தகவல்களும் அந்த எண்ணில் கிடைக்கும். மேலும், டிஜிலாக்கர் எம்பரிவஹான் செயலியில் ஆவணங்களும் எளிதாக சரிபார்த்துக் கொள்ளலாம்.
ஓட்டுநர் உரிமம் மற்றும் RC-யில் மொபைல் எண்ணை எவ்வாறு புதுப்பிப்பது
1. முதலில் parivahan.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
2. இப்போது ஆன்லைன் சேவைகளில் வாகனம் தொடர்பான சேவைகள் என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
3. இதற்குப் பிறகு பிற சேவைகள் (இதர) என்பதை கிளிக் செய்யவும்.
4. அங்கு நீங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்கவும் என்ற விருப்பத்தைப் பெறுவீர்கள், அதைக் கிளிக் செய்யவும்.
5. இப்போது உங்கள் வாகனத்தின் பதிவு எண் மற்றும் சேசிஸ் எண்ணை நிரப்பவும்.
6. இதற்குப் பிறகு நீங்கள் புதிய தொலைபேசி எண்ணை நிரப்பி OTP-ஐ உருவாக்கு என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
7. இப்போது புதிய எண்ணில் பெறப்பட்ட OTP-ஐ உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
சில முக்கியமான விஷயங்களை நோட் செய்துக் கொள்ளவும்
தொலைபேசி எண் உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதையும், OTP சரிபார்ப்பிற்குப் பிறகுதான் மொபைல் எண் புதுப்பிக்கப்படும் என்பதையும் முக்கியமாக நோட் செய்துக் கொள்ளுங்கள். இந்த சிறிய செயல்முறை முடிந்ததும், புதிய எண் DL மற்றும் RC-யில் பதிவு செய்யப்படும், மேலும் மற்ற அனைத்து அறிவிப்புகளும் உங்கள் புதிய எண்ணுக்கு நேரடியாக வரும்.
About the Author
Vijaya Lakshmi