சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகத்தில் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் சென்னை எழிலகம் வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவுப் பணியாளர்கள் தங்களை காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும், உரிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாகத் தொடர் போராட்டங்களை நடத்தி […]
