டெல்லி: பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம் மூலம் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான அந்நிய முதலீட்டை இந்தியா பெறுகிறது. சந்திரயான் முதல் செயற்கை நுண்ணறிவு வரையிலான, செமி கண்டக்டர் மற்றும் கழிவுநீர் மேலாண்மைப் போன்றவற்றில் இருநாடுகளும் இணைந்து பயணிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாக வெளியுறவுத்துறைத் தெரிவித்துள்ளது. இஸ்ரோவிற்கும் ஜப்பானின் விண்வெளி நிறுவனமான ஜாக்ஸாவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி, “பூமியின் எல்லைகளுக்கு அப்பால் மற்றும் விண்வெளியில் மனிதகுலத்தின் முன்னேற்றத்தின் அடையாளமாக செயலில் […]
