முதல் டி20 போட்டி: நெதர்லாந்தை எளிதில் வீழ்த்திய வங்காளதேசம்

சில்ஹெட்,

நெதர்லாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று சில்ஹெட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக தேஜா நிடமனுரு 26 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய தஸ்கின் அகமது 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 137 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணி வெறும் 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 138 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 54 ரன்களும், சைப் ஹசன் 36 ரன்களும் அடித்தனர்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வங்காளதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி இதே மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.