இமாச்சலில் பருவமழை சீற்றம்: 320 பேர் உயிரிழப்பு, 819 சாலை மூடல்

சிம்லா: இ​மாச்சல பிரதேசத்​தில் தொட ரும் பரு​வ​மழை​யின் சீற்​றம் காரண​மாக அம்​மாநிலத்​தின் உட்​கட்​டமைப்பு கடுமை​யாக பாதித்​துள்​ளது.

இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணை​யம் (எஸ்​டிஎம்ஏ) தெரி​வித்​துள்​ள​தாவது: மேகவெடிப்பு மற்​றும் கன மழை​யால் இமாச்சல பிரதேசம் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது. மூன்று தேசிய நெடுஞ்​சாலைகள், 1,236 மின் மாற்​றிகள், 424 நீர் வழங்​கல் திட்​டங்​கள், 819 சாலைகள் சேதமடைந்​துள்​ளன.

கடந்த ஜூன் 20 முதல், மாநிலத்​தில் ஏற்​பட்ட ஒட்​டுமொத்த இறப்பு எண்​ணிக்கை 320-ஆக அதி​கரித்​துள்​ளது. இவற்​றில் நிலச்​சரிவு, திடீர் வெள்​ளம், மின்​சா​ரம் போன்​றவை தொடர்​பான சம்​பவங்​களால் மட்​டும் 166 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். சாலை விபத்​துகளில் சிக்கி 154 பேர் உயிரிழந்துள்​ளனர்.

கடுமை​யான நிலச்​சரிவு ஏற்​பட்​டுள்​ள​தால் நூற்​றுக்​கணக்​கான கிராமப்​புற சாலைகள் துண்​டிக்​கப்​பட்​டுள்​ளன. சம்பா (253), மண்டி (206), கங்க்ரா (61) போன்ற மாவட்​டங்​கள் மிக​வும் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. 1,000-க்​கும் மேற்​பட்ட மின் விநியோக மாற்​றிகள் சேதமடைந்​துள்​ள​தால் மின்​சார விநியோகம் பெரு​மள​வில் தடைபட்​டுள்​ளது.

424 திட்​டங்​களில் நீர் விநி​யோகம் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால், குடிநீர் மற்​றும் நீர்ப்​பாசன வசதி​கள் தடைபட்​டுள்​ளன. சம்பா (77 திட்​டங்​கள்), குலு (39), மண்டி (56) மற்​றும் சிம்லா (32) ஆகிய இடங்​களில் அதிக பாதிப்பு பதி​வாகி​யுள்​ளது.

சாலைகளை சுத்​தம் செய்​ய​வும், மின் விநியோகத்தை மீட்​டெடுக்​க​வும், நீர் விநி​யோக அமைப்​பு​களை சரிசெய்​ய​வும் நிர்​வாகம் பல குழுக்​களை நியமித்​துள்​ளது. இவ்​வாறு எஸ்​டிஎம்ஏ தெரி​வித்​துள்​ளது.

பத்ரிநாத் பாதிப்பு: உத்தராகண்​டில் பெய்த கனமழை காரண​மாக பத்​ரி​நாத் நெடுஞ்​சாலை​யில் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.