சென்னை: டிஜிபி சங்கர் ஜிவால் ஆகஸ்டு 31ந்தேதி ஓய்வு பெற்ற நிலையில், புதிய டிஜிபியை தேர்வு செய்யாத தமிழ்நாடு அரசு, சீனியாரிட்டியில் 8வது இடத்தில் உள்ள வெங்கட்ராமன்-ஐ பொறுப்பு டிஜிபியாக நியமித்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் சமீபத்திய பொறுப்பு டிஜிபி நியமனம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு முரணானது என்று குறிப்பிட்டு ”மக்கள் கண்காணிப்பகம்” நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் உச்ச நீதிமன்றத்தில் ‘நீதிமன்ற அவமதிப்பு’ வழக்கு தொடர்ந்துள்ளார். அதுபோல சென்னை உயர்நீதிமன்றத்திலும் […]