20% எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிரான மனு தள்ளுபடி

புதுடெல்லி: நாடு முழு​வதும் எத்​த​னால் கலந்த பெட்​ரோல் பயன்​பாட்​டுக்கு எதி​ராக வழக்​கறிஞர் அக் ஷய் மல்​ஹோத்ரா உச்ச நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​தார்.

அவர் தனது மனு​வில், “2023-க்கு முன்பு தயாரிக்​கப்​பட்ட கார்​கள் மற்​றும் இரு சக்கர வாக​னங்​கள் மற்​றும் சில பிஎஸ்-6 மாடல் வாக​னங்​கள் அதிக எத்​த​னால் கலந்த எரிபொருள் பயன்​பாட்​டுக்கு ஏற்ற வகை​யில் வடிவ​மைக்​கப்​பட​வில்​லை. பெட்​ரோலில் 20 சதவீதம் எத்​த​னால் கலப்​ப​தால் இயந்​திர தேய்​மானம், எரிபொருள் இழப்பு மற்​றும் வாகன பராமரிப்பு செலவு அதி​கரிக்க வாய்ப்​புள்​ளது. எனவே எரிபொருள் நிலை​யங்​களில் எத்​த​னால் கலக்​காத பெட்​ரோலும் கிடைப்​பதை உறு​திப்​படுத்த மத்​திய அரசுக்கு உத்​தர​விட வேண்​டும்” என்று கூறி​யிருந்​தார்.

இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அமர்வு முன் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. இதற்கு மத்​திய அரசு சார்​பில் ஆஜரான அட்​டர்னி ஜெனரல், இந்த வழக்​கின் பின்​னணி​யில் உள்ள நோக்​கங்​கள் குறித்து கேள்வி எழுப்​பி​னார். எத்​த​னால் கலப்​ப​தால் கரும்பு விவ​சா​யிகளுக்கு ஏற்​படும் நன்​மை​களை பட்​டியலிட்ட அவர், மத்​திய அரசு உரிய ஆய்​வு​களுக்​குப் பிறகு இத்​திட்​டத்தை அமல்​படுத்​துகிறது” என்​றார். இதையடுத்து இந்​த மனுவை நீதிப​தி​கள் தள்ளுபடி செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.